​ராமேசுவரத்​தில் சூறைக்காற்று வீசியதால் பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தம்

​ராமேசுவரத்​தில் சூறைக்காற்று வீசியதால் பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தம்
Updated on
1 min read

ராமநாதபுரம்: ராமேசுவரத்​தில் சூறைக்​காற்று வீசி​ய​தால் பாம்​பன் பாலத்​தில் நேற்று காலை ரயில் சேவை நிறுத்​தப்​பட்​டது. மாலை​யில் காற்​றின் வேகம் குறைந்​த​தால், மீண்​டும் ரயில்​கள் இயக்​கப்​பட்​டன.

வங்​கக் கடலில் உரு​வாகி​யுள்ள ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலத்​தால் ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் வழக்​கத்​துக்கு மாறாக சூறைக்​காற்​றுடன் கடல் சீற்​ற​மாகக் காணப்​படு​கிறது. இந்​நிலை​யில், நேற்று காலை​யில் பாம்​பன் பாலத்​தில் 64 கி.மீ. வேகத்​தில் சூறைக்​காற்று வீசி​யது. இதையடுத்​து, பயணி​களின் பாது​காப்பு கருதி பாம்​பன் பாலத்​தில் ரயில் சேவை நிறுத்​தப்​பட்​டது.

அதனால் நேற்று காலை ராமேசுவரத்​திலிருந்து மதுரை புறப்​பட்ட பயணி​கள் ரயில் அக்​காள்​மடத்​தில் நிறுத்​தப்​பட்​டது. மதுரையி​லிருந்து ராமேசுவரம் நோக்கி வந்த பயணி​கள் ரயில் உச்​சிபுளி ரயில் நிலை​யத்​தில் நிறுத்​தப்​பட்​டது.

திரு​வனந்​த​புரம்​-​ராமேசுவரம் அமிர்தா விரைவு ரயில் மண்​டபத்​தில் நிறுத்​தப்​பட்​டது. ராமேசுவரம்​-​திரு​வனந்​த​புரம் அமிர்தா விரைவு ரயில் மண்​டபம் ரயில் நிலை​யத்​திலிருந்து பிற்​பகல் 1.55-க்கு இயக்​கப்​பட்​டது. இந்த ரயில் ராமேசுவரம்​-மண்​டபம் இடையே ரத்து செய்​யப்​பட்​டது.

திருச்​சி​யில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த விரைவு ரயில் ராம​நாத​புரம் ரயில் நிலை​யத்​தில் நிறுத்​தப்​பட்​டது. இந்த ரயில் ராம​நாத​புரம்​-​ராமேசுவரம் இடையே ரத்து செய்​யப்​பட்​டது. அயோத்​யா-​ராமேசுவரம் ஸ்ரதா சேது விரைவு ரயில் நேற்று காலை மானாமதுரை​யில் நிறுத்​தப்​பட்​டது. அதே​போல, நேற்று முன்​தினம் இரவு 8.50 மணிக்கு சென்னை எழும்​பூரில் புறப்​பட்டு ராமேசுவரம் வந்த விரைவு ரயில் மானாமதுரை​யில் நிறுத்​தப்​பட்​டது என்று தெற்கு ரயில்வே தெரி​வித்​துள்​ளது.

பாம்​பன் பாலத்​தில் நேற்று மாலை காற்​றின் வேகம் குறைந்​தது. 35 கி.மீ. வேகத்​தில் காற்று வீசி​யதை அடுத்​து, ராமேசுவரம் - தாம்​பரம் விரைவு ரயில் ராமேசுவரம் ரயில் நிலை​யத்​தில் இருந்து பாம்​பன் பாலம் வழி​யாகச் சென்​றது. தொடர்ந்​து, ராமேசுவரம்​-சென்னை விரைவு ரயில் ராமேசுவரத்​தில் இருந்து பயணி​களு​டன் புறப்​பட்​டுச் சென்​றது.

​ராமேசுவரத்​தில் சூறைக்காற்று வீசியதால் பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தம்
சாஸ்த்ரா பல்கலை. ஆக்கிரமித்திருந்த 31 ஏக்கர் நிலம் மீட்பு: நீதிமன்ற உத்தரவின்பேரில் நடவடிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in