மன்னார் வளைகுடா கடற்பகுதியில் ரூ.25 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

2 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர்
பறிமுதல் செய்யப்பட்ட `ஹாஷிஷ்' போதைப் பொருள்.

பறிமுதல் செய்யப்பட்ட `ஹாஷிஷ்' போதைப் பொருள்.

Updated on
1 min read

ராமேசுவரம்: மன்​னார் வளை​குடா கடற்​பகு​தி​யில் ரூ.25 கோடி மதிப்​புள்ள ‘ஹாஷிஷ்’ போதைப் பொருளை பறி​முதல் செய்த இலங்கை கடற்​படை​யினர், இது தொடர்​பாக 2 பேரைக் கைது செய்​தனர்.

தலைமன்​னார் அருகே மன்​னார் வளை​குடா கடற்​பகு​தி​யில் இலங்கை கடற்​படை​யினர் ரோந்து சென்​ற​போது, சந்​தேகத் ​துக்​குரிய வகை​யில் தமிழக எல்​லை​யி​லிருந்து இலங்கை எல்​லைக்​குள் ஒரு ஃபைபர் படகு நுழைந்​தது.

அந்​தப் படகை இலங்கை கடற்​படை​யினர் விரட்​டிப் பிடித்து சோதனை​யிட்​ட​ போது, உள்ளே போதைப் பொருள் பதுக்கி வைத்​திருப்​பது தெரிய வந்​தது. இதையடுத்​து, படகில் இருந்த இலங்​கை​யைச் சேர்ந்த 2 பேரைப் பிடித்​து, தாழ்​வுப்​பாடு கடற்​படை முகா​முக்​குக் கொண்டு சென்​றனர்.

பின்னர், இரு​வரை​யும் கைது செய்த இலங்கை கடற்​படை​யினர், படகில் இருந்த 50 கிலோ ‘ஹாஷிஷ்’ போதைப் பொருள் மற்​றும் படகை பறி​முதல் செய்​தனர். பின்​னர் அவரை போதைப்​பொருள் தடுப்​புப் பிரி​வினரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டன.

பறி​முதல் செய்​யப்​பட்ட போதைப் பொருளின் சர்​வ​தேச மதிப்பு ரூ.25 கோடி ஆகும். கடத்​தலில் தொடர்​புடைய​வர்​கள் குறித்து இலங்கை கடற்​படை​யினர் விசா​ரித்து வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>பறிமுதல் செய்யப்பட்ட `ஹாஷிஷ்' போதைப் பொருள்.</p></div>
குறைபாட்டுடன் பிறந்த குழந்தையை கொன்ற வழக்கு: தம்பதிக்கு ஆயுள் சிறையை உறுதி செய்த நீதிமன்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in