குறைபாட்டுடன் பிறந்த குழந்தையை கொன்ற வழக்கு: தம்பதிக்கு ஆயுள் சிறையை உறுதி செய்த நீதிமன்றம்

குறைபாட்டுடன் பிறந்த குழந்தையை கொன்ற வழக்கு: தம்பதிக்கு ஆயுள் சிறையை உறுதி செய்த நீதிமன்றம்
Updated on
1 min read

மதுரை: குறை​பாட்​டுடன் பிறந்த குழந்தையைக் கொன்ற வழக்​கில் தம்​ப​திக்கு விதித்த ஆயுள் தண்​டனையை உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உறுதி செய்​தது. விருதுநகர் மாவட்​டம் ஸ்ரீவில்​லிபுத்​தூரைச் சேர்ந்​தவர் முனீஸ்​வரன். இவரது மனைவி ரேவ​தி. தனி​யார் கல்​லூரி​யில் பேராசிரிய​ராகப் பணிபுரிந்து வந்​தார்.

இவர்​களுக்கு மனநலப் பாதிப்​புடன் பெண் குழந்தை பிறந்​தது. குழந்தையைப் பராமரிப்​ப​தற்​காக ரேவதி பேராசிரியர் பணியி​லிருந்து வில​கி​னார்.

எனினும், குழந்தையை நினைத்து கணவன், மனைவி இரு​வரும் மன உளைச்​சலுக்கு உள்​ளா​னார்​கள். 2018-ல் குழந்தை விஷமருந்​தி​ய​தாக மதுரை அரசு ராஜாஜி மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்​தது. குழந்தையை விஷம் கொடுத்து கொலை செய்​த​தாக கணவன், மனை​வியை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இந்த வழக்​கில் இரு​வருக்​கும் ஸ்ரீவில்​லிபுத்​தூர் நீதி​மன்​றம் ஆயுள் தண்​டனை வழங்​கியது. இதை எதிர்த்து இரு​வரும் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மேல் ​முறை​யீடு மனு தாக்​கல் செய்​தனர். மனுவை விசா​ரித்து நீதிப​தி​கள் ஜி.கே.இளந்​திரையன், ஆர்​.பூர்​ணிமா அமர்வு பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: இந்த வழக்​கில் பல சாட்​சிகள், பிறழ் சாட்​சிகளாக மாறி​யுள்​ளனர்.

இருப்​பினும், பெற்​றோ​ரால் விஷம் கொடுக்​கப்​பட்டு குழந்தை இறந்​தது என்​பது மருத்​துவ ஆதா​ரங்​கள் மூலம் தெரிய வரு​கிறது. குழந்தையை வளர்ப்​ப​தில் குற்​றம் சாட்​டப்​பட்ட பெற்​றோர் சந்​தித்த சிரமங்​களை இந்த நீதி​மன்​றம் அனு​தாபத்​துடன் கருத்​தில் கொண்​டாலும், அந்​தக் குழந்தை தானாக இந்த உலகுக்கு வரவில்லை என்​பதை நினை​வில் கொள்ள வேண்​டும்.

மனவளர்ச்சி குன்​றிய குழந்தைகளை பெற்​றோர் கொலை செய்​வதற்கு சட்​டம் அனு​ம​தித்​தால், அது​போன்ற குழந்தைகள் யாரும் இந்த உலகில் உயிர்​வாழ முடி​யாது. குழந்தை மனநலப் பாதிப்​புடன் பிறந்​தா​லும், உடல் ஊனத்​துடன் பிறந்​தா​லும் அல்​லது எந்​தக் குறை​பாடும் இல்​லாமல் பிறந்​தா​லும் அவர்​களைப் பராமரிப்​பது பெற்​றோரின் கடமை​யாகும்.

சட்​டத்தை யாரும் கையில் எடுத்​துக்​கொண்​டு, மற்​றொரு​வரின் உயிரைப் பறிக்க உரிமை​யில்​லை. மாற்​றுத் திற​னாளி குழந்தைகளுக்காக பல பெற்​றோர் பெரும் தியாகங்​களைச் செய்​கிறார்​கள். இந்த வழக்​கில், இரு​வருக்​கும் விசா​ரணை நீதி​மன்​றம் தண்​டனை வழங்​கியது சரியே. மேல்​முறை​யீட்டு மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது. இவ்​வாறு நீதிப​தி​கள் உத்​தர​வில் கூறி​யுள்​ளனர்.

குறைபாட்டுடன் பிறந்த குழந்தையை கொன்ற வழக்கு: தம்பதிக்கு ஆயுள் சிறையை உறுதி செய்த நீதிமன்றம்
அமித்ஷா பங்கேற்ற கூட்ட மேடை அருகே ட்ரோன் வீழ்த்தப்பட்டதா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in