"காஷ்மீரிகளை சிறையில் அடைக்க விரும்புகிறதா காங்கிரஸ்?” - ‘வந்தே மாதரம்’ விவகாரத்தில் உமர் அப்துல்லா கேள்வி

உமர் அப்துல்லா | கோப்புப்படம்
உமர் அப்துல்லா | கோப்புப்படம்
Updated on
1 min read

ஸ்ரீநகர்: வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாடுவது கட்டாயம் என்று நாடு முழுவதும் சட்டம் அமலில் உள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, "காஷ்மீரிகள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?" என காங்கிரஸ் கட்சிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜம்​மு-​காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் கடந்த திங்​கள்​கிழமை நடைபெற்ற நிகழ்ச்​சி​யில் முதல்​வர் உமர் அப்​துல்​லா, தேசிய மாநாட்டுக் கட்​சித் தலைவர் பரூக் அப்​துல்லா உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். அப்​போது நிகழ்ச்​சி​யில் வந்தே மாதரம் முழு பாடல் பாடப்​பட்​டது. இரு மூத்த தலை​வர்​களின் ஆதர​வுடனேயே வந்தே மாதரம் முழு பாடல் பாடப்​பட்​டது.

இந்​நிலை​யில், வந்தே மாதரம் பாடல் பாடப்​பட்ட வீடியோவை சமூக வலை​தளத்​தில் பகிர்ந்த காங்​கிரஸ் மூத்த தலை​வரும், ஜம்மு-​காஷ்மீர் காங்​கிரஸ் கட்சி பொறுப்​பாள​ரு​மான கே.சி.வேணுகோ​பால், “வந்தே மாதரம் பாடலின் முழு வடிவத்தையும் பாட வேண்​டாம். அந்​தப் பாடலின் குறுகிய வடிவத்தை மாபெரும் விடு​தலைப் போராட்ட வீரர்​கள் உரு​வாக்கி நமக்​குத் தந்​துள்​ளனர். எனவே, அவர்​களின் ஞானத்​தை​யும் தீர்ப்பை​யும் மதிக்க வேண்​டும். காங்​கிரஸ் கட்​சி​யின் நிலைப்பாட்டுடன் தேசிய மாநாட்​டுக் கட்சி இணைந்து நிற்க வேண்​டும்” என கூறி இருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள உமர் அப்துல்லா, "தேசியப் பாடல் தொடர்பாக ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 'வந்தே மாதரம்' பாடலின் அனைத்து வரிகளையும் பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது ஜம்மு-காஷ்மீருக்கு மட்டுமல்ல, நாடு முழுமைக்கும் பொருந்தும். நாடு முழுவதும் உள்ள அரசு நிகழ்ச்சிகளுக்கான விதிமுறை இதுவே. இதைப் பின்பற்றத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் காஷ்மீரிகள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறதா?.

ஒரு கட்சியாக, நாங்கள் 'வந்தே மாதரம்' பாடலை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை, இனிமேலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஆனால் சட்டப்பூர்வமான கடமைகளுக்கு நாங்கள் கட்டுப்பட வேண்டும். சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவிலும் தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடல் இசைக்கப்படும்” என்று அவர் கூறினார்.

முன்னதாக இந்த விவகாரம் குறித்துப் பேசிய தேசிய மாநாட்டு கட்​சி​யின் மூத்த தலை​வர் பஷீர் அகமது, “கூட்​ட​ணிக் கட்​சி​யாக இருக்​கும் காங்​கிரஸ், வந்தே மாதரம் பாடலை முழு​மை​யாக பாட வேண்​டுமா அல்​லது எவ்​வளவு பாட வேண்​டும் என்று எங்​கள் கட்​சிக்கு உத்​தர​விடத் தேவை​யில்​லை. கருத்​தைச் சொல்​வதற்கு காங்​கிரஸ் மூத்த தலைவர் வேணுகோ​பாலுக்கு உரிமை உள்​ளது. ஆனால், அதை கூட்​ட​ணிக் கட்​சிகள் மீது திணிக்க வேண்​டாம். இது மக்​களின் விருப்​பம்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. மேலும், ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவும் அளித்து வருகிறது.

உமர் அப்துல்லா | கோப்புப்படம்
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் புறப்பட்டுச் சென்றார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in