உயர் சிறப்பு மருத்துவ இடங்களை பாதுகாக்க வேண்டும்: அமைச்சருக்கு மருத்துவர்கள் சங்கம் கடிதம்

உயர் சிறப்பு மருத்துவ இடங்களை பாதுகாக்க வேண்டும்: அமைச்சருக்கு மருத்துவர்கள் சங்கம் கடிதம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தின் உயர் சிறப்பு மருத்துவ இடங்களை பாதுகாக்க வேண்டும் என்று, சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜுக்கு, தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மு.அகிலன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்ப தாவது: தமிழகத்தில் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில், அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டு இடங்களில் காலியாகவுள்ள இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாற்ற வேண்டும் என்று, கடந்த மாதம் 29-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்களில் சேரும் அரசு மருத்துவர்கள், தங்களது படிப்பை முடித்த பின் ஓய்வு பெறும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கான பிணை பத்திரத்தில் கையெழுத்திடுகின்றனர்.

இதன் மூலம், மாநிலத்தின் பொது சுகாதார கட்டமைப்பு வலுப்பெற்று, அரசு மருத்துவமனைகளில் உயர் சிறப்பு சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த கல்வியாண்டில், அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 219 இடங்களில் இதுவரை 68 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 151 இடங்கள் காலியாக உள்ளன. சில ஆண்டுகளாக தொடர்ந்து ‘கட்-ஆஃப்’ பூஜ்யம் வரை கூட குறைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டும் ‘கட்-ஆஃப்’ குறைக் கப்படும் என எதிர்பார்த்து நூற்றுக்கணக்கான அரசு மருத்துவர்கள் காத்திருக் கின்றனர்.

50 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையில், நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, மாநில அரசு மறு சீராய்வு மனு தாக்கல்செய்ய வேண்டும். தேவை ஏற்பட்டால், 3 நபர் அமர்வு பெஞ்சுகளில் மற்றும் புதிய வழக்குகளை தொடுத்து மாநில உரிமையை தக்க வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

உயர் சிறப்பு மருத்துவ இடங்களை பாதுகாக்க வேண்டும்: அமைச்சருக்கு மருத்துவர்கள் சங்கம் கடிதம்
ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் தாமதம் ஏன்? - ட்ரம்ப் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in