ஏஐ தொழில்நுட்பத்தில் வேட்பாளர் படங்களை உருவாக்காதீர்: நாதக ஐடி விங் அறிவுறுத்தல்

ஏஐ தொழில்நுட்பத்தில் வேட்பாளர் படங்களை உருவாக்காதீர்: நாதக ஐடி விங் அறிவுறுத்தல்
Updated on
1 min read

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி தனது பரப்புரை உத்திகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கட்சியின் கொள்கைகளையும் திட்டங்களையும் மக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில், ‘எங்கள் தேசம்’ என்ற பெயரில் புதிய அதிகாரபூர்வ இணையதள தொலைக்காட்சியை (வெப் டிவி) அக்கட்சித் தொடங்க உள்ளது.

அதன்படி ‘எங்கள் தேசம்’ என்ற பெயருடன் நாதக அதிகாரபூர்வ புதிய வலை தொலைக்காட்சி வரும் பிப்.14-ம் தேதி உதயமாகவுள்ளதாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே சமூக வலைதளங்களுக்காக, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் படங்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டாம் எனத் தொண்டர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் வடிவமைப்புகளில் வேட்பாளர்களின் முகம் மற்றும் விவரங்கள் தவறாகப் பதிவாவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

“நடைபெறவிருக்கும் மாநாட்டில் 234 வேட்பாளர்களையும் சீமான் அறிமுகப்படுத்திய பிறகு, தலைமையிலிருந்து அதிகாரபூர்வமாக வழங்கப்படும் வடிவமைப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என்று கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு வலியுறுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர்க்கவும், உண்மைத் தரவுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் இக்கட்டுப்பாடுகள் நாதக-வினருக்கு விதிக்கப்பட்டுள்ளன.

ஏஐ தொழில்நுட்பத்தில் வேட்பாளர் படங்களை உருவாக்காதீர்: நாதக ஐடி விங் அறிவுறுத்தல்
“திமுக மீது காங்கிரஸ் தொண்டர்கள் வேதனையில் இருக்கிறார்கள்” - கிரிஷ் சோடங்கர் குமுறல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in