திமுக மூத்த தலைவர் எல்.கணேசன் காலமானார்: முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி

தஞ்சாவூரில் எல்.கணேசன் உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தின ருக்கு ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின். (உள்படம்) எல்.கணேசன்.

தஞ்சாவூரில் எல்.கணேசன் உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தின ருக்கு ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின். (உள்படம்) எல்.கணேசன்.

Updated on
1 min read

தஞ்சாவூர்: ​திமுகவின் மூத்த தலை​வர் எல்​.கணேசன் வயது முதிர்வு காரண​மாக நேற்று கால​மா​னார். அவரது உடலுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உள்​ளிட்​டோர் அஞ்​சலி செலுத்​தினர். தஞ்​சாவூர் மாவட்​டம் ஒரத்​த​நாடு அருகே கண்​ணந்​தங்​குடி கீழையூரைச் சேர்ந்​தவர் எல்​. கணேசன்​(91).

திமுகவின் உயர்​நிலை செயல்​திட்​டக் குழு உறுப்​பின​ரான இவர், ஒரத்​த​நாடு சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் திமுக சார்​பில் போட்​டி​யிட்டு 3 முறை எம்​எல்​ஏ​வாக​வும், ஒரு முறை மாநிலங்​களவை உறுப்​பின​ராக​வும், திருச்சி மக்​கள​வைத் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு ஒரு முறை மக்​களவை உறுப்​பின​ராக​வும், ஒரு​முறை சட்ட மேலவை உறுப்​பின​ராக​வும் இருந்​துள்​ளார்.

அதே​போல, சொந்த ஊரில் 7 முறை ஊராட்​சித் தலை​வ​ராக இருந்​துள்​ளார். 1993-ல் வைகோ மதிமுகவை தொடங்​கிய​போது, அவைத் தலை​வ​ராக இருந்து கட்​சியை வழிநடத்​தி​னார். சில ஆண்​டு​கள் கழித்து மீண்​டும் திமுக​வில் இணைந்​தார். முன்​னாள் முதல்​வர் மு.கருணாநி​தி, திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் உள்​ளிட்​டோரிடம் நெருங்​கிப் பழகிய​வர். கடந்த சில ஆண்​டு​களாக வயது மூப்பு காரண​மாக அரசி​யல் நிகழ்​வு​களில் பங்​கேற்​காமல் வீட்​டில் ஓய்​வில் இருந்​தார்.

இந்​நிலை​யில், நேற்று அதி​காலை எல்​.கணேசன் தஞ்​சாவூரில் உள்ள தனது இல்​லத்​தில் வயது முதிர்வு காரண​மாக உயி​ரிழந்​தார். அவருக்கு மனைவி கமலா மற்​றும் ஒரு மகள், 2 மகன்​கள் உள்​ளனர். அவரது உடலுக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​திய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், அவரது மனைவி கமலா, மகள் மற்​றும் மகன்​களிடம் ஆறு​தல் கூறி​னார்.

அப்​போது, அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, கோவி.செழியன், அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி, சிவ.வீ.மெய்​ய​நாதன், டிஆர்​பி.​ராஜா, ரகுப​தி, எம்​.பி.க்​கள் டிஆர்​.​பாலு, ச.முரசொலி மற்​றும் எம்​எல்​ஏக்​கள் உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்​.

தலைவர்கள் இரங்கல்: திமுக முன்னாள் எம்.பி. எல்.கணேசன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், விசிக தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரி வித்துள்ளனர்.

<div class="paragraphs"><p>தஞ்சாவூரில் எல்.கணேசன் உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தின ருக்கு ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின். (உள்படம்) எல்.கணேசன்.</p></div>
டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பில் தொடர்புடைய மருத்துவர்கள் அப்பாவிகள் பெயரில் சிம் கார்டுகள் வாங்கி பயன்படுத்தியது அம்பலம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in