

சென்னை: திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை ஆகியவை பெருமளவில் அதிகரித்துச் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
தவெக அரசைக் கண்டித்து வரும் 31-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அதன்படி சென்னை வடக்கில் கனிமொழி எம்.பி. வனிதா குமாரியும் சென்னை தெற்கில் விஜயா தாயன்பன், கனிமொழி சோமு ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.
தூத்துக்குடியில் கீதா ஜீவன், கோவையில் வீரமணி, திருச்சியில் விஜிலா சத்யானந்த், மதுரையில் பவானி ராஜேந்திரன் கண்டன உரையாற்றுகின்றனர்.
அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.