எங்கள் பரிந்துரைகளை சேர்த்திருந்தால் தொகுதி மறுவரையறைக்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்காது: ஆர்.எஸ்.பாரதி

ஆர்.எஸ்.பாரதி

ஆர்.எஸ்.பாரதி

Updated on
2 min read

சென்னை: ​தி​முக​வின் பரிந்​துரைகள் சேர்க்​கப்​பட்​டிருந்​தால், நாடாளு​மன்​றத்​தில் தொகுதி மறு​வரையறை மசோ​தாவை எதிர்க்க மாட்​டோம் என்று அக்​கட்​சி​யின் அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பாரதி தெரி​வித்​தார்.

நாடாளு​மன்​றத்​தில் கடந்த ஏப்​ரல் மாதம் நடை​பெற்ற நீட்​டிக்​கப்​பட்ட பட்​ஜெட் கூட்​டத்​தொடரின்​போது அறி​முகம் செய்​யப்​பட்ட தொகுதி மறு​வரையறை மசோ​தா, இண்​டியா கூட்​ட​ணியால் தோற்​கடிக்​கப்​பட்​டது. இந்த நிலை​யில் நாடாளு​மன்ற மழைக்​காலக் கூட்​டத்​தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆக.13-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இந்த கூட்​டத்​தொடரில் திருத்​தப்​பட்ட தொகுதி மறு​வரையறை மசோ​தாவை மீண்​டும் கொண்​டுவர மத்​திய அரசு முயற்​சிப்​ப​தாக கூறப்​படு​கிறது. இண்​டியா கூட்​ட​ணி​யில் இருந்து காங்​கிரஸ் வெளி​யேறி​விட்​ட​தால், தற்​போது 22 எம்​.பி.க்​கள் கொண்ட திமுக முடிவை நோக்கி பரவலாக எதிர்​பார்ப்​பு​கள் எழுந்​துள்​ளன.

இதுதொடர்​பாக திமுக அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பாரதி ஆங்​கில செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறும்​போது, “நாங்​கள் ஏற்​கெனவே ஒரு​முறை தொகுதி மறுசீரமைப்பு மசோ​தாவை முறியடித்​துள்​ளோம். மீண்​டும் மசோதா தாக்​கல் செய்​யப்​படும்​போது அதன் உள்​ளடக்​கத்தை நாங்​கள் பரிசீலிப்​போம்.

அது தமிழகம் உள்பட தென் மாநிலங்​களின் நலன்​களுக்கு எதி​ராக இருந்​தால், திமுக அதை எதிர்க்​கும். மாறாக, மத்​திய அரசு திமுக​வின் பரிந்​துரைகளை அதில் இணைத்​திருந்​தால், அதை எதிர்க்க வேண்​டிய அவசி​யமில்​லை. அதே​நேரம், மாநில உரிமை​களுக்​கான போராட்​டத்​தில் திமுக உறு​தி​யாக இருக்​கிறது” என்​றார்.

இதுகுறித்து டெல்​லி​யில் செய்​தி​யாளர்​களிடம் திமுக செய்​தித் தொடர்​புக் குழு தலை​வர் டி.கே.எஸ்​.இளங்​கோவன் கூறியது: தொகுதி மறுவரையறை மசோ​தாவை ஏப்​ரல் மாதத்​தில் தோற்​கடித்​தோம். கடந்த 2 தசாப்​தங்​களாக மக்​கள்​தொகையை வெற்​றிகர​மாக கட்​டுப்​படுத்​திய தென்​னிந்​திய மாநிலங்​களுக்கு அது மிகப்​பெரிய பாதிப்பை ஏற்​படுத்​தும். எனினும், புதிய மசோ​தா​வில் வேறு ஏதேனும் மாற்​றம் இருந்​தால் நாங்​கள் அதை பரிசீலிப்​போம்.

இண்​டியா கூட்​டணி குறித்த எங்​கள் நிலைப்​பாடு இன்​னும் இறுதி செய்​யப்​பட​வில்​லை. இந்த கூட்​ட​ணி​யின் முதல் நோக்​கம் பாஜகவை எதிர்ப்​பது​ தான். திமுக​வின் நோக்​க​மும் பாஜகவை எதிர்ப்​பது​தான். பொது​வான பிரச்​சினை​களில் பாஜகவை எதிர்த்து இண்​டியாகூட்​ட​ணி​யுடன் நாங்கள் நிற்​போம். இவ்​வாறு கூறி​னார்.

இதற்​கிடையே, தற்​போது லண்​டனில் இருக்​கும் ஸ்​டா​லின் திமுக எம்​.பி.க்​களு​டன் காணொலி மூலம் நேற்று முன்​தினம் ஆலோ​சனை நடத்​தி​னார். அப்​போது, மாநில உரிமை​களுக்​காக திமுக தொடர்ந்து துணை நிற்​கும். மத்​தி​யில் உள்ள பாஜக அரசு கொண்டு வரும் எந்​தவொரு புதிய சட்​ட​மும் மாநில உரிமை​களை பறிக்​கும் வகை​யிலோ அல்​லது அரசி​யலமைப்​புக்கு முரணாகவோ அமைந்​தால் அதை திமுக எதிர்க்​கும். கூட்​டாட்சி தத்​து​வம் மற்​றும் அரசி​யலமைப்பு கோட்​பாடு​களை பாது​காப்​ப​தில் தனது நிலைப்​பாட்டை திமுக தொடர்ந்து பின்​பற்​றும். மேலும், நாடாளு​மன்​றத்​தில் தமிழகத்​தின் பிரச்​சினை​களை​யும் மிக வலு​வாக எழுப்​புவோம்” என்று ஸ்டா​லின் கூறி​யிருந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

மத்திய இணை அமைச்சர் அத்வாலே நம்பிக்கை

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் சமூக நீதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அத்வாலே கூறும்போது, ‘‘நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறு வரை மசோதா கொண்டுவரப்படும். தற்போது திமுக காங்கிரஸ் இடையே மோதல் நிலவுகிறது, ஆகையால் காங்கிரசின் முடிவுகளுக்கு திமுக ஒத்துழைப்பு தராது என நம்புகிறேன். மசோதாவுக்கு திமுக ஆதரவு தரலாம், இல்லை மசோதாவை புறக்கணிக்கலாம்’’ என்றார்.

<div class="paragraphs"><p>ஆர்.எஸ்.பாரதி</p></div>
“எரிபொருள் விநியோக நெருக்கடியிலும் இந்திய வளர்ச்சி தடைபடவில்லை” - பிரதமர் மோடி பெருமிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in