ராஜபாளையம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பில் ஆட்சேபம்: விருதுநகர் ஆட்சியரிடம் திமுக கடிதம்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பில் ஆட்சேபம் உள்ளதாக தெரிவித்த திமுக நிர்வாகி ராமமூர்த்தி உள்ளிட்டோர்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பில் ஆட்சேபம் உள்ளதாக தெரிவித்த திமுக நிர்வாகி ராமமூர்த்தி உள்ளிட்டோர்.

Updated on
1 min read

விருதுநகர்: ​விருதுநகரில் நடந்த வாக்​குப் ​ப​திவு இயந்​திரங்​கள் சரி​பார்ப்​பில் ஆட்​சேபம் உள்​ள​தாக திமுக நிர்​வாகி ஆட்​சி​யரிடம் கடிதம் அளித்​துள்ளார்.

கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ராஜ​பாளை​யம் தொகு​தி​யில் தவெக வேட்​பாளர் ஜெகதீஸ்​வரி 65,548 வாக்​கு​கள் பெற்றுவெற்​றி​பெற்​றார்.

திமுக வேட்​பாளர் தங்​கப்​பாண்​டியன் 54,943 வாக்​கு​களும், பாஜக வேட்​பாளர் பிரிசில்லா பாண்​டியன் 36,318 வாக்​கு​களும், நாம் தமிழர் கட்சி வேட்​பாளர் கார்த்​தி​கேயன் 16,972 வாக்​கு​களும் பெற்​றிருந்​தனர். நோட்​டா​வில் 753 வாக்​கு​கள் பதி​வாகி இருந்​தன. திமுக வேட்​பாளரை​விட 10,605 வாக்​கு​கள் அதி​கம் பெற்று தவெக வெற்​றி​பெற்றது.

இந்​நிலை​யில், ராஜ​பாளை​யம் தொகு​தி​யில் பயன்​படுத்​தப்​பட்ட மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரத்​தின் செயல்​பாட்டை சரி​பார்க்க வேண்​டும் என்று உயர் நீதி​மன்​றத்​தில் திமுக வேட்​பாளர் தங்​கப்​பாண்​டியன் மனுத்​தாக்​கல் செய்​திருந்​தார். இதையடுத்து நீதி​மன்ற உத்​தர​வுப்​படி பெங்​களூரு​விலிருந்து பெல் நிறுவன பொறி​யாளர்​கள் புதன்​கிழமை விருதுநகர் வந்​தனர்.

மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் வைக்​கப்​பட்​டுள்ள பாது​காப்பு அறை மாவட்ட ஆட்​சி​யர் சுகபுத்ரா முன்​னிலை​யில் திறக்​கப்​பட்​டது. திமுக வேட்​பாளர் தங்​கப்​பாண்​டியன் சார்​பில் கட்சி நிர்​வாகி ராமமூர்த்தி முன்​னிலை​யில் மாதிரிக்​காக 2 வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் எடுக்​கப்​பட்டு மறு​வாக்​குப்​ப​திவு நடத்தி சரி​பார்க்​கப்​பட்​டது.

தொடர்ந்​து, கடந்த 5 நாட்​களாக இந்த ஆய்வு நடத்​தப்​பட்​டது. இந்​நிலை​யில், வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் சரி​பார்ப்​பில் ஆட்​சேபம் உள்​ள​தாக திமுக வேட்​பாளர் தங்​கப்​பாண்​டியனின் அதி​காரம் பெற்ற முகவர் ராமமூர்த்தி தெரி​வித்​தார்.

இதுகுறித்து அவர் கூறுகை​யில், பாகம் எண் 206-ல் உள்ள மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரத்​தின் கட்​டுப்​பாட்டு யூனிட் ஒருபக்​கம் சீல் வைக்​கப்​பட​வில்​லை, கையொப்​பம் இல்​லை. இதில் எங்​களுக்கு சந்​தேகம் ஏற்​படு​வ​தால் ஆட்​சேபிக்​கிறோம். இது தொடர்​பாக மாவட்ட ஆட்​சி​யருக்​குக் கடிதம் அளித்​துள்​ளோம் என கூறி​னார்.

<div class="paragraphs"><p>வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பில் ஆட்சேபம் உள்ளதாக தெரிவித்த திமுக நிர்வாகி ராமமூர்த்தி உள்ளிட்டோர்.</p></div>
காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் முடிவால் தமிழகத்துக்கு பெரும் பின்னடைவு: திமுக

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in