திமுக எம்.பி. கனிமொழி பிறந்தநாள்: அமித் ஷா, நடிகர் விஜய் வாழ்த்து

பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற கனிமொழி எம்.பி.

பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற கனிமொழி எம்.பி.

Updated on
1 min read

சென்னை: திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி, தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். அதன்பின் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.

கனிமொழியை, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தவெக தலைவர் நடிகர் விஜய் ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர்கள் முத்துசாமி, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், சேகர்பாபு, மனோ தங்கராஜ், அன்பில் மகேஸ், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்தினர்.

திமுக அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய அலுவ­ல­கச் செய­லா­ளர்­ பூச்சி முருகன் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று, கனிமொழிக்கு புத்தகம் மற்றும் பரிசுகளை வழங்கி, வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

<div class="paragraphs"><p>பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற கனிமொழி எம்.பி.</p></div>
திருச்சியில் களைகட்டிய ‘நம்ம ஊரு மோடி பொங்கல் விழா’ - அமித் ஷா வாழ்த்து ‘மிஸ்’ ஆனதால் பெண்கள் அதிருப்தி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in