மேகேதாட்டு அணை குறித்து நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர திமுக நோட்டீஸ்

மேகேதாட்டு அணை
மேகேதாட்டு அணை
Updated on
1 min read

புதுடெல்லி: மேகேதாட்டு அணை குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி மற்றும் மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, எம்.பி ஆகியோர் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், மேகேதாட்டு அணை குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி மற்றும் மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, எம்.பி ஆகியோர் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக திமுக வெளியிட்ட தகவலில், ‘மேகேதாட்டு அணை விவகாரத்தை முன்வைத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவை அலுவல் நடத்தை விதிகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பிற அலுவல்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்திடவும், ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வரவும், மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகத்துக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

அந்த நோட்டீஸில், ‘காவிரி ஆற்றின் மீது முன்மொழியப்பட்டுள்ள மேகேதாட்டு சமநிலைப்படுத்தும் நீர்த்தேக்கம் (Mekedatu Balancing Reservoir) குறித்த கவலைகள், அதனால் பாதிக்கப்படும் மாநிலமான தமிழ்நாட்டின் மீதான அதன் தாக்கம் மற்றும் இது தொடர்பாக ஒரு தீர்ப்பாயத்தை அமைப்பதன் அவசியம் ஆகிய அவசர முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தை விவாதித்து தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகா அரசை கண்டித்து தமிழக அரசு கொண்டுவந்த தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 19-ம் தேதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அப்போது, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “தனித் தீர்மானத்தில், மேகேதாட்டு பிரச்சினைகளுக்காக தனி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்க்க வேண்டும். இந்த தீர்மானத்தை கடிதம் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதைவிட, அனைத்து கட்சிகளின் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஒன்றிணைந்து நேரடியாக சென்று மத்திய அரசிடம் வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

அவரது கோரிக்கை ஏற்கப்பட்டது. ஆனால் அதற்கு அரசியல் கட்சிகள் சில, விவசாய சங்கங்கள் சில கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், மேகேதாட்டு அணை குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி மற்றும் மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, எம்.பி ஆகியோர் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

மேகேதாட்டு அணை
‘The Odyssey’ விமர்சனம்: திரைக் காவியமா, தேறாத பிரம்மாண்டமா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in