தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில் பங்கேற்கும் சிறுபான்மையினர் ஆணைய தலைவரை நீக்க வேண்டும்: திமுக எம்எல்ஏ ஆஸ்டின் குற்றச்சாட்டு

தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில் பங்கேற்கும் சிறுபான்மையினர் ஆணைய தலைவரை நீக்க வேண்டும்: திமுக எம்எல்ஏ ஆஸ்டின் குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: சட்​டப்​பேர​வை​யில் தொழில்​துறை உள்​ளிட்ட துறை​களின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக எம்​எல்ஏ ஆஸ்​டின் பேசி​ய​தாவது: தமிழ்​நாடு மாநில சிறு​பான்​மை​யினர் ஆணை​யத்​தின் தலை​வ​ராக பெலிக்ஸ் ஜெரால்டு நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

இவர் தொலைக்​காட்சி விவாதங்​களில் பங்​கேற்று வரு​கிறார். ஒரு சட்​டப்​பூர்​வ​மான அமைப்​பின் உயர் பதவியில் இருப்​பவர் அரசி​யல் தொடர்​பான கருத்​துகளை விவாதங்​களில் பேசக்​கூ​டாது, தமிழ்​நாடு மாநில சிறு​பான்​மை​யினர் சட்​டத்​தில் அவ்​வாறு குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

அவர் விவாதங்​களில் பங்​கேற்​பதை தொடர விரும்​பி​னால், அந்த பதவியி​லிருந்து அவரை நீக்க வேண்​டும். அமைச்​சர் சிடிஆர் நிர்​மல் குமார்: பெலிக்ஸ் ஜெரால்டு தொலைக்​காட்சி விவாதங்​களில் பங்​கேற்​பது அவரது தனிப்​பட்ட விருப்​பம்.

அதில் சட்​டப்​பூர்​வ​மாக ஏதாவது தவறு இருந்​தால் விவா​திக்​கலாம். பேர​வைத் தலை​வர் ஜேசிடி பிர​பாகர்: சட்​டப்​பூர்வ அமைப்​புக்​கும், வாரிய தலை​வருக்​கும் வித்​தி​யாசம் இருக்​கிறது. ஆஸ்​டின் சொல்​வதை கவனத்​தில் கொண்​டு, ஆய்வு செய்​ய​லாம்.

தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில் பங்கேற்கும் சிறுபான்மையினர் ஆணைய தலைவரை நீக்க வேண்டும்: திமுக எம்எல்ஏ ஆஸ்டின் குற்றச்சாட்டு
தவெக அரசில் தொடரும் குதிரை பேரத்தை தடுக்க வேண்டும்: ஆளுநரிடம் டிடிவி தினகரன் மனு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in