“அரசுப் பள்ளிகளை விஷப் பூச்சிகளின் கூடாரம் ஆக்கிவிட்டது திமுக அரசு” - நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்|கோப்புப் படம்

நயினார் நாகேந்திரன்|கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: ‘ஏழை எளிய மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் தானே, விஷப்பூச்சிகளும் பாம்புகளும் ஊர்ந்தால் என்ன என்று அலட்சியம் காட்டுகிறது திமுக அரசு. அரசுப் பள்ளிக் கூடங்களை விஷ ஜந்துக்களின் கூடாரமாக்கிவிட்டது திமுக அரசு’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அரசுப் பள்ளிக் கூடங்களை விஷ ஜந்துக்களின் கூடாரமாக்கிய திமுக அரசு. நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விஷப்பூச்சி கடித்து மூன்றாம் வகுப்பு மாணவி பலியானதாக வெளிவந்துள்ள செய்தி மனதை பதைபதைக்கச் செய்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன் திருவாரூர் மாவட்டம் கேத்தனூர் அரசுப் பள்ளி வகுப்பறையில் புத்தகம் எடுக்கும்போது பாம்பு கடித்ததில் பதினோராம் வகுப்பு மாணவன் பலியாகிய நிலையில், மீண்டுமொரு கொடூரச் சம்பவம் மற்றொரு அரசுப்பள்ளியில் நிகழ்ந்திருப்பது திமுக அரசின் கீழ் பள்ளிக் கல்வித் துறையின் அவல நிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஏழை எளிய மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் தானே, விஷப்பூச்சிகளும் பாம்புகளும் ஊர்ந்தால் என்ன, மேற்கூரை இடிந்து விழுந்தால் என்ன, மதிய உணவில் புழு நெளிந்தால் என்ன என்று அலட்சியம் காட்டும் திமுக அரசால் தமிழக மாணவர்கள் பலியானது போதும். தம் பிள்ளைகளின் உயிரைப் பறித்து தமிழகத்தின் எதிர்காலத்தையே சிதைக்கும் திமுக அரசைத் தமிழக மக்கள் துரத்தியடிப்பர்’ எனத் தெரிவித்துள்ளார்

<div class="paragraphs"><p>நயினார் நாகேந்திரன்|கோப்புப் படம்</p></div>
பெங்களூரு மெட்ரோ கட்டண உயர்வுக்கு எதிராகப் போராடிய பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா கைது!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in