திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
Updated on: 
1 min read

சென்னை: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது 88 வயதாகும் துரைமுருகன், வயதுமூப்பால் வரும் பிரச்சினைகளுக்காக, அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார். வயதுமூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தாலும், தொடர்ச்சியாக கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், சமீபத்தில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்று உரையாற்றினார்.

இந்நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
“இறைவன் மீது நம்பிக்கை வைத்தால் அனைத்து வளமும் கிடைக்கும்” - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in