தி.நகரில் நவீன வாகன காப்பகங்கள் அமைக்கப்படும்: திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் வாக்குறுதி

தி.நகர் தொகுதி திமுக வேட்பாளர் ராஜா அன்பழகனை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

தி.நகர் தொகுதி திமுக வேட்பாளர் ராஜா அன்பழகனை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

Updated on
1 min read

சென்னை: தி.நகர் தொகுதி திமுக வேட்​பாள​ர் ராஜா அன்​பழகன், நேற்று பல்வேறு இடங்​களில் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​ட​போது தொகு​தி​யில் தான் செயல்​படுத்த திட்​ட​மிட்​டுள்ள 10 அம்ச திட்​டம் குறித்து அவர் கூறிய​தாவது: தி.நகர் பகு​தி​யில் உள்ள பழைய குடிசை​மாற்று வாரிய குடி​யிருப்​பு​களை இடித்​து​விட்டு புதிய குடி​யிருப்​பு​கள் கட்​டப்​படும்.

நடை​பாதை வியா​பாரி​களுக்கு மாநக​ராட்சி மூலம் கடைகள் முறைப்​படுத்தி வழங்​கப்​படும். போக்​கு​வரத்து நெரிசல் மிக்க தி.நகரில் நவீன முறை​யில் 2 மற்​றும் 4 வாகன காப்பக வசதி​கள் ஏற்​படுத்​தித் தரப்​படும்.

மாணவர்​கள் பயன்​பெறும் வகை​யில் புதூர் அரசு மேல்​நிலைப்​பள்ளி வளாகத்​தில், அரசு கலை அறி​வியல் கல்​லூரி தொடங்க நடவடிக்கை எடுக்​கப்​படும்.

சோமசுந்​தரம் பாரதி நகர், ராஜாங்​கம் மத்​திய வீதி, உள்​ளிட்ட பகு​தி​களில் வசிக்​கும் மக்​கள், வீட்​டுமனைப் பட்டா வழங்க நீண்டகால​மாக கோரிக்கை விடுத்து வரு​கின்​றனர். அவர்​களுக்கு வீட்​டுமனைப் பட்டா வழங்க ஏற்​பாடு செய்​வேன் என்றார்.

<div class="paragraphs"><p>தி.நகர் தொகுதி திமுக வேட்பாளர் ராஜா அன்பழகனை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.</p></div>
இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம்: தலைநகரை முற்றுகையிட்ட அரசியல் தலைவர்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in