ஆறு அம்ச வாக்குறுதிகள் அளித்து தி.நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் பிரச்சாரம்

அசோக் நகர் பகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தி.நகர் தொகுதி  திமுக வேட்பாளர் ராஜா அன்பழகனுக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அசோக் நகர் பகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தி.நகர் தொகுதி திமுக வேட்பாளர் ராஜா அன்பழகனுக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated on
1 min read

சென்னை: பொது​மக்​களுக்கு 6 அம்ச வாக்​குறு​தி​கள் அளித்து தி.நகர் தொகு​தி​யில் திமுக வேட்​பாளர் ராஜா அன்​பழகன் நேற்று தேர்​தல் பிரச்​சா​ரம் செய்​தார். தி.நகர் தொகுதி திமுக வேட்​பாளர் ராஜா அன்​பழகன் நேற்று அசோக் நகர் பகு​தி​யில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்​தார்.

அவருக்கு சால்வை அணி​வித்​தும் ஆரத்தி எடுத்​தும் உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. பிரச்​சா​ரத்​தின்​போது ஆறு வாக்​குறு​தி​கள் அளித்து அவர் பேசி​ய​தாவது: தி.நகர் பேருந்து நிலை​யம் நவீன வணிக வளாகத்​துடன் அடுக்​கு​மாடி பார்க்​கிங் வசதி​யுடன் புதுப்​பிக்​கப்​படும்.

கோடை​காலங்​களில் குடிநீர் பிரச்​சினை ஏற்​படும் இடங்​களில் மேல்​நிலை குடிநீர் தொட்​டிகள் அமைக்​கப்​படும். மாணவர்​கள் பயன்​பெறும் வகை​யில் இலவச கணினி மற்​றும் நுழைவுத்​தேர்வு பயிற்சி மைய​மும், திறன் வளர்ப்பு மைய​மும், வேலை​வாய்ப்பு வழி​காட்​டும் மைய​மும் ஏற்​படுத்​தப்​படும்.

மழைநீர் வடி​கால் பணி​கள் விரிவுபடுத்​தப்​பட்டு மழை நீர் தேங்கா வண்​ணம் சீரமைக்​கப்​படும். மேற்கு மாம்​பலம் பகு​தி​யில் மூத்த குடிமக்​கள் பயன்​பெறும் வண்​ணம் மருத்​துவ மைய​மும் இலவச டயாலிசிஸ் மைய​மும், அமைக்​கப்​படும்.

போக்​கு​வரத்து நெரிசல் மிக்க தி.நகரில் நெரிசலை கட்​டுப்​படுத்த நவீன முறை​யில் நான்கு சக்​கரம் மற்​றும் இரு சக்கர வாகன பார்க்​கிங் வசதி​கள் ஏற்​படுத்​தப்​படும். 2-வது முறை​யாக திமுக ஆட்சி அமைந்​ததும் இந்த வாக்​குறு​தி​கள் அனைத்​தும் நிறைவேற்றி தரப்​படும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

மேலும், கடந்த 5 ஆண்டு காலதிமுக ஆட்​சி​யில் நிறைவேற்​றப்​பட்ட அரசு நலத்​திட்​டங்​களை​யும், திமுக​வின் தேர்​தல் வாக்​குறு​தி​களை​யும் பொது​மக்​களிடம் எடுத்​துக் கூறி அவர் வாக்கு சேகரித்​தார்.

இப்​பிரச்​சா​ரத்​தில் பகுதி செய​லா​ளர்​கள் கே. ஏழு​மலை, கோ. சு. மணி, தலைமை செயற்​குழு உறுப்​பினர் எம்​.எஸ். பழனி, தலைமை பொதுக்​குழு உறுப்​பினர்​கள் ஜெ. ஜானகி​ராமன், ஜி.டி. அம்​பேத், வட்ட செய​லா​ளர்​கள் ஆர்​.லோகு, மு. செல்​வகு​மார், பகுதி துணை செய​லா​ளர் வி.பி.எஸ். ஜனார்த்​தனன் மற்​றும் கூட்​டணி கட்​சி நிர்​வாகி​கள்​ கலந்​துக் கொண்​டனர்​.

<div class="paragraphs"><p>அசோக் நகர் பகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தி.நகர் தொகுதி  திமுக வேட்பாளர் ராஜா அன்பழகனுக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.</p></div>
விருதுநகர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in