திமுகவில் வேட்பாளர் நேர்காணல் நிறைவு: ஏப்ரல் முதல் வாரத்தில் பட்டியல் வெளியீடு?

திமுகவில் வேட்பாளர் நேர்காணல் நிறைவு: ஏப்ரல் முதல் வாரத்தில் பட்டியல் வெளியீடு?
Updated on
1 min read

திமுகவில் கடந்த 5 நாட்களாக நடைபெற்ற வேட்பாளர் நேர்காணல் நிறைவு பெற்றது. ஏப்ரல் முதல் வாரத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

திமுகவில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் சென்னை அறிவாலயத்தில் கடந்த மார்ச் 17-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது. இறுதி நாளில் திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் தொகுதிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது.

முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு விருப்பமனு அளித்தவர்களிடம் விரிவாக நேர்காணல் நடத்தியது. இதில் அமைச்சர்கள் கே.என் நேரு, அன்பில் மகேஸ், கோவி.செழியன், சிவசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களிடம் தொகுதி நிலவரம், மற்ற கட்சிகளின் வாக்கு விகிதம், அரசின் நலத்திட்டங்களால் பலனடைந்தவர்கள் விவரம், எஸ்ஐஆர் தாக்கம் உட்பட பல்வேறு கேள்விளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

மேலும், தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து திமுக வேட்பாளர் பட்டியல் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவில் வேட்பாளர் நேர்காணல் நிறைவு: ஏப்ரல் முதல் வாரத்தில் பட்டியல் வெளியீடு?
6 தொகுதிகள் கிடைக்காததால் அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசன் அதிருப்தி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in