

சென்னை: திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் திருச்சி சிவாவுக்கு ‘கலைஞர் விருது’, கனிமொழி என்.வி.என்.சோமுவுக்கு ‘பாவேந்தர் விருது’ வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செப்.15-ம் தேதி திமுக முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.
இதில் 2026-ம் ஆண்டுக்கான ‘பெரியார் விருது’ - விவசாய அணி துணைச் செயலாளர் கு.செல்லப்பா, ‘அண்ணா விருது’ - சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே.சுபாஷ், ‘கலைஞர் விருது’ - துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா, ‘பாவேந்தர் விருது’ - மருத்துவ அணித் தலைவர் கனிமொழி என்.வி.என்.சோமு, ‘பேராசிரியர் விருது’ - தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ்.அகமது தம்பி, ‘மு.க.ஸ்டாலின் விருது’ - இளைஞர் அணி துணைச் செயலாளர் நா. இளையராஜா ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் முரசொலி அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘2026-ம் ஆண்டுக்கான ‘முரசொலி செல்வம் விருது'
ஊடகவியலாளரும் எழுத்தாள ருமான ப.திருமாவேலனுக்கு வழங்கப்படும்’’ என தெரிவிக்கப் பட்டுள்ளது.