கொண்டாட்டத்தில் தேமுதிக... திண்டாட்டத்தில் திமுக! - களைகட்டும் விழுப்புரம் ‘சீட்’ கச்சேரி

கொண்டாட்டத்தில் தேமுதிக... திண்டாட்டத்தில் திமுக! - களைகட்டும் விழுப்புரம் ‘சீட்’ கச்சேரி
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளை இம்முறை கட்டாயம் கையகப்படுத்தி ஆகவேண்டும் என காய் நகர்த்தி வருகிறது திமுக. இந்த நிலையில், இப்போது தேமுதிக-வும் கூட்டணிக்குள் வந்திருப்பதால் அந்தக் கட்சிக்கும் அந்த ஐந்தில் ஒன்றை விட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறது.

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, திருக்கோவிலூர் தொகுதியைக் கைப்பற்றியது. விழுப்புரம் மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் அங்கு வெற்றி பெற்றார். ஆனால், அடுத்தடுத்த தேர்தல்களில் அவர் முறையே விழுப்புரம் மற்றும் திருக்கோவிலூரில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

<div class="paragraphs"><p>வெங்கடேசன்,&nbsp;கவுதம சிகாமணி</p></div>

வெங்கடேசன், கவுதம சிகாமணி

இருப்பினும் கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் அவருக்கு இம்முறையும் தலைமை வாய்ப்பளிக்கும் என்று சொல்லும் விழுப்புரம் தேமுதிக-வினர், “எங்களது முதல் சாய்ஸ் திருக்கோவிலூர் தான். தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டால் மட்டுமே விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி தொகுதியைக் கேட்டுப் பெறுவோம். இதை அண்ணியாரிடம் முன்கூட்டியே சொல்லிவிட்டோம்” என்கின்றனர்.

ஆனால், “தேமுதிக-வினர் விருப்பப் பட்டியலில் வைத்திருக்கும் இந்த மூன்று தொகுதிகளுமே திமுக-வுக்கு சிட்டிங் தொகுதிகள். இதில் திருக்கோவிலூர், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தொகுதி. விழுப்புரம், மாவட்டச் செயலாளர் லட்சுமணனின் தொகுதி.

விக்கிரவாண்டி, அன்னியூர் சிவாவின் தொகுதி. இவர்கள் மூவருமே மீண்டும் போட்டியிடுவார்கள். ஒருவேளை பொன்முடிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால் அவரது மகன் கவுதம சிகாமணி திருக்கோவிலூரில் போட்டியிடுவார். அதனால், தேமுதிக-வுக்கு அவர்கள் கேட்கும் தொகுதியைக் கொடுப்பதில் சிக்கல் வரலாம்” என்கிறார்கள் விழுப்புரம் திமுக-வினர்.

கொண்டாட்டத்தில் தேமுதிக... திண்டாட்டத்தில் திமுக! - களைகட்டும் விழுப்புரம் ‘சீட்’ கச்சேரி
“சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை விதைக்கும் திமுக” - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in