தேர்​தலில் திமுக கூட்​டணி பெறப்போகும் வெற்றி பாஜகவை வீழ்த்துவதற்​கான நம்பிக்கையை ஏற்படுத்தும்: முதல்வர் ஸ்​டா​லின் உறுதி

தேர்​தலில் திமுக கூட்​டணி பெறப்போகும் வெற்றி பாஜகவை வீழ்த்துவதற்​கான நம்பிக்கையை ஏற்படுத்தும்: முதல்வர் ஸ்​டா​லின் உறுதி
Updated on
1 min read

சென்னை: சட்​டப்​பேரவை தேர்​தலில் திமுக கூட்​டணி பெறப்​போகும் வெற்​றி, பாஜகவை வீழ்த்​து​வதற்​கான நம்​பிக்​கையை ஒட்​டுமொத்த இந்​தி​யா​வுக்​கும் வழங்​கும் என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் நூற்​றாண்டு நிறைவு விழா சென்னையில் நேற்று நடை​பெற்​றது. கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் தலைமை​யில் நடை​பெற்ற விழாவில், கட்​சி​யின் வரலாற்று புகைப்பட கண்​காட்​சியை முன்​னாள் மாநில செய​லா​ளர் இரா.​முத்​தரசன் திறந்து வைத்​தார். தேசிய பொது செய​லா​ளர் டி.​ராஜா சிறப்​புரை​யாற்​றி​னார்.

கூட்​டணி கட்சி தலை​வர்​கள் செல்​வப்​பெருந்தகை (காங்​கிரஸ்), கி.வீரமணி (தி​க), வைகோ (மதி​முக), திரு​மாவளவன் (விசிக), பெ.சண்​முகம் (மார்க்​சிஸ்ட்), ஜவாஹிருல்லா (மமக), பழ.ஆசைதம்பி (மார்க்​சிஸ்ட்​-லெனினிஸ்ட்), தி.வேல்​முரு​கன் (தவாக), அருணாச்​சலம் (மநீம), முகமது அபுபக்​கர் (இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக்) உள்​ளிட்​டோர் வாழ்த்​துரை வழங்​கினர்.

விழா​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: திரா​விட இயக்​கத்​துக்​கும், பொது​வுடமை இயக்​கத்​துக்​கு​மான நட்பு தேர்​தல் அரசி​யலை கடந்​தது. இந்த ஒற்​றுமையை சிதைக்க பலர் முயன்​றனர். ஆனால் அவர்​களது எண்​ணம் தான் சிதைந்​தது. எங்​களது தோழமையை எந்த சக்​தி​யாலும் பிரிக்க முடி​யாது.

மதச்​சார்​பின்​மை, சோசலிசம், பொது​வுடமை, சமூக நீதி என்​கிற சொற்​களை எல்​லாம் ஆட்​சி​யில் இருந்து மட்​டுமல்ல, அதி​காரத்​தில் இருந்தே அழிக்க வேண்​டும் என பாஜக துடிக்​கிறது. அதற்​காகத் தான் ஜனநாயக சக்​தி​களை எல்​லாம் ஒருங்​கிணைத்து இண்​டியா கூட்​ட​ணியை உரு​வாக்கி பாஜக​வின் வேகத்தை குறைத்​திருக்​கிறோம்.

வரும் சட்​டப்​பேரவை தேர்​தல் தமிழகத்​துக்​கும், தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்​கும் நடக்​கிறது. தமிழகத்​துக்கு துரோகங்​களை செய்​து​விட்​டு, துரோகங்​களுக்கு ஏற்ற கொத்​தடிமை​களை சேர்த்​துக்​கொண்டு அவர்​களது முதுகில் ஏறி வரு​கிறது பாஜக. பிரச்​சா​ரக் கூட்​டத்​துக்கு வந்த பிரதமர் மோடி அதி​முக​வின் பெயரைக் கூட சொல்​ல​வில்​லை. ஏனென்​றால் அதி​முக தனிக் கட்சி கிடை​யாது. பாஜக​வின் கிளை.

இந்​தி​யா​வில் பட்​டியலின மக்​களுக்கு எதி​ரான மாநிலங்​களாக பாஜக ஆளும் உத்​தரப்​பிரதேசம், ராஜஸ்​தான், மத்​தி​யபிரதேசம், பிஹார், ஒடி​சா, மஹா​ராஷ்டிரா உள்​ளன. இது​தான் டப்பா இன்​ஜினின் லட்​சணம். தமிழகத்​தில் பாஜக​வின் டப்பா இன்​ஜினுக்கு வேலையே கிடை​யாது. தமிழகத்​தில் நாம் பெறப்​போகும் வெற்​றி, பாஜகவை வீழ்த்த முடி​யும் என்​கிற நம்​பிக்கை ஒட்​டுமொத்த இந்​தி​யா​வுக்​கும் வழங்​கும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

முன்​ன​தாக பேசிய டி.​ராஜா, “ஏகா​திபத்​தி​யத்​துக்குஎதி​ராக ஒரு வார்த்​தைக் கூட பேசாத அரசாக பாஜக இருக்​கிறது. கட்​சி​யின் அடுத்த நூற்​றாண்டு தொடங்​கும்​ வேளை​யில்​ பாஜக​வின்​ ஆட்​சி நீடிக்​கக்​ கூ​டாது” என்​றார்​.

தேர்​தலில் திமுக கூட்​டணி பெறப்போகும் வெற்றி பாஜகவை வீழ்த்துவதற்​கான நம்பிக்கையை ஏற்படுத்தும்: முதல்வர் ஸ்​டா​லின் உறுதி
ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2.93 லட்சம் கோடி: தமிழகத்துக்கு 2 புல்லட் ரயில்கள் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in