திமுக-அதிமுக கூட்டணி என்பது ஆதவ் அர்ஜூனா பரப்பும் வதந்தி: சிவசங்கர் கருத்து

Minister Sivashankar

சிவசங்கர்

Updated on
1 min read

பெரம்பலூர்: ​தி​முக- அதி​முக கூட்​டணி என்​பது அமைச்​சர் ஆதவ் அர்​ஜூனா வகுத்த வியூ​கம். சமூக வலை​தளத்​தில் அவர் பரப்​பும் வதந்​தியை அதி​முக தொண்​டர்​கள் விரும்​ப​வில்லை என திமுக முன்​னாள் அமைச்​சர் எஸ்​.எஸ்​.சிவசங்​கர் தெரி​வித்​தார்.

பெரம்​பலூர் மாவட்​டம் குன்​னம் தொகு​தி​யில் நேற்று எம்​எல்ஏ அலு​வல​கத்​தைத் திறந்து வைத்த அவர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போதே திமுக- தவெக இடையே ​தான் போட்டி என முதல்​வர் விஜய் தெரி​வித்​தார். இன்​று​வரை அதே கருத்​தைத்​தான் அவர் முன்​வைக்​கி​றார். இந்த கருத்தை சுட்​டிக்​காட்​டி​தான் இரு துருவ அரசி​யலை முன்​னெடுக்க தவெக முனைப்​புடன் உள்​ளது என விசிக தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​திருந்​தார். மாறாக, திமுக மீதான வெறுப்​பில் அவர் பேச​வில்லை.

அதி​முக கூடாரத்தை காலி செய்ய வேண்​டும் என்​பதே முதல்​வர் விஜ​யின் எண்​ணம். தவெக​வின் இந்த செயல்​பாட்​டுக்கு தோழமைக் கட்​சிகள் எதிர்ப்​புத் தெரிவிக்​க​வும் முடி​யாமல், ஆதரவு அளிக்​க​வும் முடி​யாமல் தவிக்​கின்​றன. திமுக ஆட்​சி​யின்​போது கூட்​ட​ணி​யின் தலை​வர் மு.க.ஸ்​டா​லினை, தோழமைக் கட்​சி​யினர் நேரடி​யாக சந்​தித்து பேசமுடி​யும்.

ஆனால், இப்​போது முதல்​வர் விஜய்யை தோழமைக் கட்​சி​யினர் சந்​திக்க முடிய​வில்​லை. திமுக ஆட்​சி​யில் சட்​டம்- ஒழுங்கு சீர்​குலைந்​த​தாக குற்​றம்​சாட்​டிய முதல்​வர் விஜய், தற்​போது நாகர்​கோ​வில் லாக்​கப் மரணத்​துக்கு என்ன பதில் சொல்ல போகிறார்? திமுக- அதி​முக கூட்​டணி என்​பது அமைச்​சர் ஆதவ் அர்​ஜூனா வகுத்த வியூ​கம். சமூக வலை​தளத்​தில் அவர் பரப்​பும் வதந்​தியை யாரும் நம்​பத் தயா​ராக இல்​லை.

தற்போது வரை புதிய திட்​டங்​களும் கொண்டு வரப்​பட​வில்​லை. திமுக ஆட்​சி​யில் அமல்​படுத்​தப்​பட்ட திட்​டங்​களுக்கு ஸ்டிக்​கர் ஒட்​டும் வேலையை செய்​கின்​றனர். பாஜக​வால் நேரடி​யாக ஆட்​சி​யைப் பிடிக்க முடிய​வில்​லை. எனவே​தான், அண்​ணா​மலை போன்​றவர்​களை களத்​தில் இறக்​கி​விட்டு கால் பதிக்க திட்​ட​மிட்​டுள்​ளது என்​றார்.

Minister Sivashankar
புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: ஒருவர் உயிரிழப்பு; 120 பேர் மருத்துவமனையில் அனுமதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in