

பாஸ்கர்
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டை வாக்கு எண்ணும் மையத்தில் திமுக முகவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் வி.ஜி.ராஜேந்திரன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் திமுக முகவரும், திமுகவின் பூண்டி மேற்கு ஒன்றிய அவைத் தலைவருமான பட்டரைப்பெரும்புதூரைச் சேர்ந்த பாஸ்கர் (57) நேற்று காலை செவ்வாப்பேட்டை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள திருவள்ளூர் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்தார்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே பாஸ்கர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, செவ்வாப்பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.