ஃபீனிக்ஸ் பறவை போல் அதிமுக மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும்: பழனிசாமி நம்பிக்கை

ஃபீனிக்ஸ் பறவை போல் அதிமுக மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும்: பழனிசாமி நம்பிக்கை
Updated on
1 min read

சென்னை: ஃபீனிக்ஸ் பறவை போல், அதிமுக மீண்​டும் வெற்றி பாதைக்கு திரும்​பும் என அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி நம்​பிக்கை தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: ஜனநாயகத்​தில் மக்​கள்தான் நீதிப​தி​கள். மக்​களுக்​காக தான் ஆட்​சி. மக்​கள் வழங்​கிய முடிவை மனப்​பூர்​வ​மாக ஏற்​றுக்​கொள்​கிறேன்.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் எழுச்​சி​யுடன் முன்​வந்​து, ஜனநாயக கடமை​யாற்​றிய அனைத்து மக்​களுக்​கும் எனது நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

அதி​முக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி வேட்​பாளர்​கள் வெற்​றி​பெற்ற பிரச்​சா​ரம் செய்த பிரதமர் மோடி, மத்​திய உள்​துறை அமைச்​சர்​கள் அமித்​ஷா, பியூஷ் கோயல், ஜே.பி.நட்​டா, பாஜக தேசிய தலை​வர் நிதின் நபின் ஆகியோ​ருக்​கும், கூட்​டணி வெற்​றிக்கு உழைத்த நயி​னார் நாகேந்​திரன் (பாஜக), அன்​புமணி (பாமக), டிடிவி தினகரன் (அம​முக), ஜி.கே.​வாசன் (தமா​கா) உள்​ளிட்ட கூட்​டணி கட்​சிக் தலை​வர்​களுக்​கும், தொண்​டர்​களுக்​கும், கட்சி நிர்​வாகி​களுக்​கும் எனது நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

இந்த பின்​னடை​வில் இருந்து விரை​வில் மீண்​டும் வரு​வோம். மறைந்த முதல்​வர்​கள் எம்​ஜிஆர், ஜெயலலிதா ஆசி​யுடன், ஃபீனிக்ஸ் பறவை போல், அதி​முக மீண்​டும் வெற்​றிப் பாதைக்கு திரும்​பும்.

“எனக்கு பின்​னாலும், இன்​னும் எத்​தனை நூற்​றாண்​டு​கள் வந்​தா​லும் அதி​முக மக்​களுக்​காகவே இயங்​கும்” என்ற ஜெயலலி​தா​வின் வார்த்​தைகளை மெய்​ப்பிக்​கும் வகை​யில் அதி​முக மக்​கள் பணி​யில் என்​றென்​றும் ஈடு​படும். இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஃபீனிக்ஸ் பறவை போல் அதிமுக மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும்: பழனிசாமி நம்பிக்கை
மக்களுக்கு நன்றி கூறிய உதயநிதி ஸ்டாலின்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in