தவெக அரசு மீது குதிரை பேர புகார்: ஆளுநரிடம் திமுக, அதிமுக மனு

உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆளுநர் அர்லேகரிடம் நேற்று மனு அளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வில்சன் எம்.பி., ஆஸ்டின் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன். (அடுத்த படம்) ஆளுநரிடம் மனு அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்பதுரை எம்.பி.

தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆளுநர் அர்லேகரிடம் நேற்று மனு அளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வில்சன் எம்.பி., ஆஸ்டின் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன். (அடுத்த படம்) ஆளுநரிடம் மனு அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்பதுரை எம்.பி.

Updated on
2 min read

சென்னை: கு​திரை பேரத்​தில் ஈடு​படும் தவெக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று ஆளுநர் அர்​லேகரிடம் திமுக, அதி​முக சார்​பில் மனுகொடுக்​கப்​பட்​டுள்​ளது. ஆளுநர் தனக்கு இருக்​கும் அதி​காரத்​தின் அடிப்​படை​யில், இந்த மனு மீது உடனடி​யாக நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று அவர்​கள் வலி​யுறுத்தி உள்​ளனர்.

தமிழகத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக 108 இடங்​களில் வென்​றது. காங்​கிரஸ் - 5, இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், விசிக, இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் (ஐயூஎம்​எல்) - தலா 2 மற்​றும் அதி​முக​வில் இருந்து 25 எம்​எல்​ஏக்​களின் ஆதர​வுடன் நம்​பிக்கை வாக்​கெடுப்​பிலும் அரசு வெற்றி பெற்​றது.

காங்​கிரஸ், விசிக, ஐயூஎம்​எல் அமைச்​சர​வை​யில் பங்​கேற்று, கூட்​ட​ணி​யிலும் இணைந்​துள்​ளன. அமைச்​சரவை மற்​றும் கூட்​ட​ணி​யில் இடம்​பெற மறுத்​து​விட்ட கம்​யூனிஸ்ட் கட்​சிகள் வெளி​யில் இருந்து ஆதரவு தரு​வ​தாக கூறிவரு​கின்​றன. இந்த நிலை​யில், தவெக பலத்தை அதி​கரிக்க வேண்​டும் என்ற எண்​ணத்​தில் முதல்​வர் விஜய் இருக்​கிறார்.இந்த சூழலில், அதி​முக​வில் இருந்து இது​வரை 6 எம்​எல்​ஏக்​கள் தங்​கள் பதவியை ராஜி​னாமா செய்​து ​விட்டு தவெக​வில் இணைந்​துள்​ளனர். இதனால் தவெக குதிரை பேரத்​தில் ஈடு​படு​வ​தாக அதி​முக குற்​றம்​சாட்டி வரு​கிறது.

இதே​போல, திமுக எம்​எல்​ஏக்​களிட​மும் தவெக நிர்​வாகி​கள் குதிரை பேரம் நடத்​து​வ​தாக அக்​கட்​சி​யினர் கூறி வருகின்றனர்.இந்​நிலை​யில், திமுக அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பார​தி, பி.​வில்​சன் எம்​.பி., நிர்வாகிகள் ஆஸ்டின், இ.பரந்​தாமன் ஆகியோர் சென்னை கிண்​டி​யில் உள்ள லோக் பவனில் ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகரை நேற்று சந்​தித்து மனு கொடுத்​தனர்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் ஆர்​.எஸ்​.​பாரதி கூறிய​தாவது: அவதூறு வழக்​கில் கைது செய்​யப்​பட்ட திமுக எம்​எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனை, தவெக​வில் இணை​யு​மாறு காவல் துறை அதி​காரி​கள் மிரட்​டி​யுள்​ளனர். திமுக எம்​எல்​ஏக்​கள் ஆஸ்​டினுக்கு அமைச்​சர் பதவி​யும், சீனி​வாசனுக்கு ரூ.50 கோடி​யும் தரு​வ​தாக குதிரை பேரம் பேசி​யுள்​ளனர்.

முதல்​வர் விஜய்​யின் தனிப்​பட்ட பாது​காவலர்​கள் காவல் துறை​யினரையே பிடித்​துத் தள்​ளுகின்​றனர். தமிழக அரசி​யலின் மாண்​பைச் சிதைக்​கும் தவெக​வின் இத்தகைய செயல்​கள் குறித்து ஆளுநரிடம் மனு கொடுத்​துள்​ளோம். சட்​டப்​பூர்வ நடவடிக்கை எடுப்ப​தாக ஆளுநர் உறுதி அளித்​துள்​ளார்.

அரசுடன் தொடர்பு இல்​லாத ஜான் ஆரோக்​கிய​சாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் அமைச்​சர​வைக் கூட்​டங்​களில் பங்​கேற்று அதி​காரி​களுக்கு உத்​தர​விடு​கின்​றனர். இதுகுறித்து ஆளுநரிடம் முறை​யிட்​ட​போது, ‘‘அமைச்​சர​வைக் கூட்​டத்​தில் கலந்​து​கொள்ள வேண்​டும் என்​றால், அவர்​களை​யும் முதல்​வர் அமைச்​சர்​கள் ஆக்கி இருக்​கலாமே’’ என்று ஆளுநரே தெரிவித்தார். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இவர்​களைத் தொடர்ந்​து, அதி​முக சார்​பில் முன்​னாள் அமைச்​சர் அக்ரி கிருஷ்ண​மூர்த்​தி, இன்​பதுரை எம்​.பி. ஆகியோர் ஆளுநரை சந்​தித்து ஒரு மனு கொடுத்​தனர். இதுதொடர்​பாக செய்​தி​யாளர்​களிடம் அக்ரி கிருஷ்ண​மூர்த்தி கூறும்​போது, ‘‘தவெக குதிரை பேரத்​தில் ஈடு​படு​வ​தாக ஏற்​கெனவே ஆளுநரிடம் மனு கொடுத்​துள்​ளோம். அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்​டும் என வலி​யுறுத்தி மீண்​டும் மனு கொடுத்​தோம். ஆளுநர்தனக்கு இருக்​கும் அதி​காரத்​தின் அடிப்​படை​யில், எங்​கள் மனு​ மீது உடனடி​யாக நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று வலி​யுறுத்தி உள்​ளோம்’’ என்​றார்.

இன்​பதுரை கூறிய​போது, ‘‘அ​தி​முக​வினர் தங்​கி​யிருந்த ஒரு இடத்​துக்கு முதல்​வரே சென்​று, சில வாக்​குறு​தி​களை அளித்​த​தாக தெரி​கிறது. தன்​பிறகுதான், 4 அதி​முக எம்​எல்​ஏக்​கள் பதவி வில​கி, தவெக​வில் இணைந்​துள்​ளனர். தவெக அரசுக்கு ஆதரவு அளித்​ததற்​காக 21 அதி​முக எம்​எல்​ஏக்​கள் கட்​சித் தலை​மை​யிடம் மன்​னிப்பு கடிதம் அளித்து,மன்​னிப்பை பெற்ற பிறகு, 2 எம்​எல்​ஏக்​கள் தவெக​வில் இணைந்​துள்​ளனர். இதில் குதிரை பேரம் நடந்துள்​ளது. இதில் தலை​யிட்டு தீர்வு காண வேண்​டும் என ஆளுநரிடம் வலி​யுறுத்தி உள்​ளோம்’’ என்​றார்.

<div class="paragraphs"><p>தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆளுநர் அர்லேகரிடம் நேற்று மனு அளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வில்சன் எம்.பி., ஆஸ்டின் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன். (அடுத்த படம்) ஆளுநரிடம் மனு அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்பதுரை எம்.பி.</p></div>
“அடுத்த ஒரு நூற்றாண்டுக்கான தமிழகத்தின் புதிய வரலாற்றை எழுதுவோம்” - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in