திமுகவா, அதிமுகவா யாருடன் தேமுதிக கூட்டணி​? - இன்று அறிவிக்கிறார் பிரேமலதா

திமுகவா, அதிமுகவா யாருடன் தேமுதிக கூட்டணி​? - இன்று அறிவிக்கிறார் பிரேமலதா
Updated on
1 min read

யாருடன் கூட்டணி என்று இன்று (செவ்வாய்கிழமை) அறிவிப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் “உள்ளம் தேடி இல்லம் நாடி” என்ற கேப்டன் ரத யாத்திரை நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அவரது இந்த ரத யாத்திரை நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரத்தில் நிறைவடைந்தது. அங்கு நடந்த கூட்டத்தில் பிரேமலதா பேசியதாவது:

சென்னை கோட்டை முதல் கன்னியாகுமரி வரை வந்த தேமுதிக-வின் ரத யாத்திரை நிறைவு பெற்றுள்ளது. இனி தேமுதிகவுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். படித்தவர்கள் அதிகமாக இருக்கும் மாவட்டம், கன்னியாகுமரி. இங்கு தான் குமரி கண்டம் இருந்தது. அதேபோல தமிழ் மொழி பிறந்ததும் இந்த குமரி கண்டத்தில்தான். கன்னியாகுமரி சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தலம் ஆகும். தேமுதிக இடம் பெறும் கூட்டணி, ஆட்சிக்கு வந்ததும் இந்த சுற்றுலா தளம் மேம்படுத்தப்படும்.

தோவாளை மலர் சந்தையில் சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படும். மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இலங்கை கடற்படை தாக்குதலில் இருந்து மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். கனிம வளக் கொள்ளை தடுக்கப்படும். மயிலாடியில் கல் சிற்ப பூங்கா அமைக்கப்படும். சுசீந்திரத்தில் தடுப்பணை கட்டப்படும்.

ஆண்ட கட்சிக்கும், ஆளுகின்ற கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக தேமுதிக இருக்கிறது. சில மாதங்களில் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக கூட்டணி மகத்தான வெற்றிபெறும். கூட்டணி குறித்து சென்னையில் 3-ம் தேதி (இன்று) அறிவிப்பேன். தேமுதிக இடம்பெறும் கூட்டணி தான் தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டணி தொடர்பாக திமுக, அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது. யாருடன் கூட்டணி என இன்று அறிவிப்பதாக பிரேமலதா சொல்லியிருக்கும் நிலையில், தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திமுகவா, அதிமுகவா யாருடன் தேமுதிக கூட்டணி​? - இன்று அறிவிக்கிறார் பிரேமலதா
2-ம் கட்ட ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in