அதிமுகவை விமர்சித்ததால் அண்ணாமலையை ஓரம்கட்டி​ விட்டனர்: கர்நாடகா துணை முதல்வர் கருத்து

தளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கெலமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து, கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே சிவகுமார் பேசினார்.

தளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கெலமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து, கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே சிவகுமார் பேசினார்.

Updated on
1 min read

“அதி​முக-வை விமர்​சித்​த​தால் அண்​ணா​மலைக்கு தேர்​தலில் சீட் வழங்​காமல் பாஜக-​வில் ஓரம்​கட்​டி​விட்​டார்​கள்” என கர்​நாடகா துணை முதல்​வர் டி.கே.சிவகு​மார் தெரி​வித்​தார்.

கிருஷ்ணகிரி மாவட்​டம் தளி சட்​டப்​பேர​வைத் தொகு​திக்கு உட்​பட்ட கெலமங்​கலத்​தில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி வேட்​பாளர் ராமச்​சந்​திரனை ஆதரித்​து, கர்​நாடக மாநில துணை முதல்​வர் டி.கே சிவகு​மார் நேற்று பிரச்​சா​ரம் செய்​தார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: பெரி​யாரின் தாய்​மொழி கன்​னடம் என்​றாலும் அவர் தமிழர்​களுக்​காக​வும், தமிழ் மொழிக்​காக​வும் தன் வாழ்​நாள் முழு​வதும் பாடு​பட்​டார். கன்​னடர்​களும் தமிழர்​களும் ஒரே தாயின் பிள்​ளை​கள் போன்​றவர்​கள். மொழி​யாலும் எல்​லைகளாலும் நாம் பிரிந்​திருந்​தா​லும், தென்​னிந்​தி​யா​வின் உரிமை​களுக்​காக நாம் அனை​வரும் ஒற்​றுமை​யுடன் போராட வேண்​டும்.

கடந்த 10 ஆண்​டு​களில் பாஜக அரசு மக்​களுக்கு அளித்த வாக்​குறு​தி​கள் எதை​யும் நிறைவேற்​ற​வில்​லை. இலவச அரிசி திட்​டம், அங்​கன்​வாடி மற்​றும் ஆஷா பணி​யாளர்​கள் நலன் என எதற்​கும் அவர்​கள் முக்​கி​யத்​து​வம் அளிக்​க​வில்​லை. பாஜக-​வினர் பொய்​யான வாக்​குறு​தி​களைக் கூறி வரு​கின்​றனர்.

தமிழகத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மையி​லான அரசு மிக சிறப்​பாகச் செயல்​பட்டு வரு​கிறது. மக்​களின் இதயங்​களை வென்​றுள்ள கட்​சி​யாக திமுக திகழ்​கிறது. கடந்த 5 ஆண்​டு​களில் சாலைகள், பாலங்​கள், பள்​ளி​கள் மற்​றும் மருத்​து​வ​மனை​கள் என பல வளர்ச்​சித் திட்​டங்​களை திமுக அரசு முன்​னெடுத்​துள்​ளது. முதலீடு​களை ஈர்ப்​ப​தி​லும், வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கு​வ​தி​லும் தமிழகம் முதன்​மை​யான மாநில​மாக திகழ்​கிறது.

குறிப்​பாக, தனி​யார் துறை​யில் உள்​ளூர் மக்​களுக்கு 75 சதவீதம் இடஒதுக்​கீடு வழங்​கு​வது போன்ற முக்​கிய முடிவு​களை முதல்​வர் ஸ்டா​லின் எடுத்​துள்​ளார். காங்​கிரஸ், திமுக, கம்​யூனிஸ்ட் கட்​சிகள் மற்​றும் இதர 20 கட்​சிகள் அடங்​கிய கூட்​ட​ணிக் கட்​சிகள் ஒரு குடும்​ப​மாகச் செயல்​படு​கின்​றன. தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை கர்​நாடகா மாநிலத்​தில் ஐபிஎஸ் அதி​காரி​யாக பணி​யாற்​றிய பின்​னர் பணி​யை​விட்டு விலகி பாஜக-​வில் இணைந்​தார்.

அதி​முக-வை அவர் விமர்​சனம் செய்​ததற்​காக தற்​போது அவருக்கு தேர்​தலில் போட்​டி​யிட சீட் வழங்​காமல் பாஜக-​வில் ஓரங்​கட்​டி​விட்​டார்​கள். பெண்​களுக்கு 33 சதவீதம் இடஒதுக்​கீடு வழங்க வேண்​டும் என்​ப​தில் எங்​களது கூட்​ட​ணிக் கட்​சிகள் உறு​தி​யாக உள்​ளன. பெங்​களூரு​வில் உரு​வான இண்​டியா கூட்​டணி நாடு முழு​வதும் வலு​வாக உள்​ளது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

<div class="paragraphs"><p>தளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கெலமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து, கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே சிவகுமார் பேசினார்.</p></div>
அன்புமணியின் வேட்பாளர்களை நிராகரிக்க ராமதாஸ் வேண்டுகோள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in