அன்புமணியின் வேட்பாளர்களை நிராகரிக்க ராமதாஸ் வேண்டுகோள்

அன்புமணியின் வேட்பாளர்களை நிராகரிக்க ராமதாஸ் வேண்டுகோள்
Updated on
1 min read

அன்​புமணி நிறுத்​தி​யுள்ள வேட்​பாளர்​களை நிராகரிக்க வேண்​டும் என்று வாக்​காளர்​களுக்கு ராம​தாஸ் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட வீடியோ​வில் பேசி​யிருப்​ப​தாவது: அன்​புமணி தலை​மையி​லான அணி, மக்​கள் சேவைக்​காக இல்​லாமல், அதி​காரம் கிடைத்​தால் அதன் மூலம் பணம் சம்​பா​திப்​ப​தையே நோக்​க​மாக கொண்​டுள்​ளது. நான் வளர்த்​தெடுத்த பிள்​ளை​கள் இன்று பணத்​துக்​காக அணி மாறி, கொள்​கையற்ற கூட்​டத்​தில் இணைந்​திருப்​பது வருத்​தமளிக்​கிறது. பிறந்​த​நாள், திருமண நாள் போன்ற முக்​கிய தருணங்​களில் கூட ஒரு மகனாக தன் கடமையை செய்​யாதவர் அன்​புமணி.

குறிப்​பாக, அண்​மை​யில் நான் உடல்​நலக்​குறை​வால் பாதிக்​கப்​பட்டு சேலம் மருத்​து​வ​மனை​யில் உயிருக்​குப்​போ​ராடிய நிலை​யில், ஒரு வார்த்தை கூட நலம் விசா​ரிக்க வராதவர் அன்​புமணி. அன்​புமணி​யின் தலை​மையி​லான அணி போட்​டி​யிடும் 18 தொகு​தி​களி​லும் வாக்​காளர்​கள் விழிப்​புடன் இருக்க வேண்​டும். வாக்​காளர் பெரு​மக்​கள், இவர்​களை நிராகரித்​து, உண்​மை​யாக உங்​களுக்கு சேவை செய்​யும் நல்​ல​வர்​களை தேர்ந்​தெடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

அன்புமணியின் வேட்பாளர்களை நிராகரிக்க ராமதாஸ் வேண்டுகோள்
​பாஜகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்: உதயநிதி வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in