போக்குவரத்து, கூட்டுறவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்

போக்குவரத்து, கூட்டுறவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்
Updated on: 
1 min read

சென்னை: தமிழக அரசுப் போக்​கு​வரத்​துக் கழகப் பணி​யாளர்​கள், கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்​கு​வரத்​து அமைச்​சர் விஜய் தமிழன் பார்த்​திபன் வெளி​யிட்​ட அறிக்​கை​யில், ‘போக்​கு​வரத்​துக் கழகப் பணி​யாளர்​களை ஊக்​கு​விக்​கும் வகை​யில், முதல்​வர் உத்​தர​வின்​படி 1.06 லட்​சம் பணி​யாளர்​களுக்கு ரூ.167.12 கோடி போனஸ், கருணைத் தொகை அவர்​களது வங்​கிக் கணக்​கு​களில் நவ.2-ம் தேதி (நேற்று) வரவு வைக்​கப்​பட்​டுள்​ளது’ என்று கூறியுள்ளார்.

இதேபோல கூட்​டுறவுத் துறை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பில், போனஸ் சட்​டத்​தின்​ கீழ் வரும் கூட்​டுறவு நிறு​வனங்களில் பணி​யாளர்​களுக்கு 20% வரை போனஸ் வழங்​கப்​படும். உபரித் தொகை இல்​லாத கூட்​டுறவு நிறு​வனங்​களில் 10% போனஸ், கருணைத் தொகை தரப்​படும்.

குறைந்த பணி​யாளர்​களைக் கொண்டு செயல்​பட்டு நிகர லாபம் ஈட்​டும், போனஸ் சட்​டத்​தின்​கீழ் வராத கூட்​டுறவு நிறு​வனங்​களில் 20% வரை போனஸ், கருணைத் தொகை வழங்​கப்​படும்.

போனஸ் சட்​டத்​தின்​கீழ் வராத நிகர லாபம் ஈட்​டாத தலைமை மற்​றும் மத்​திய கூட்​டுறவு சங்​கங்​களின் பணி​யாளர்​களுக்கு ரூ.3,000, தொடக்​கக் கூட்​டுறவு சங்​கப் பணி​யாளர்​களுக்கு ரூ.2,400 கருணைத் தொகை​யாக வழங்​கப்​படும். இதன்​மூலம் மொத்​தம் ரூ.49.69 கோடி போனஸ், கருணைத் தொகை​ வழங்​கப்​பட உள்​ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்​தில் 16 கூட்​டுறவு, 2 பொதுத் துறை சர்க்​கரை ஆலைகள் உள்​ளன. இதில் உபரி உள்ள சுப்​ரமணிய சிவா, கள்​ளக்​குறிச்சி-2 ஆகிய கூட்​டுறவு சர்க்​கரை ஆலைகளுக்கு 20%, மற்ற 14 கூட்​டுறவு, 2 பொதுத்​துறை ஆலைகளுக்கு 10% போனஸ் வழங்​கப்​பட உள்​ளது. இதன்​மூலம் 5,190 பேர் பயன்​பெறு​வார்​கள்.

போக்குவரத்து, கூட்டுறவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்
கே.என்.நேருவின் மேல்​முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

X