தமிழகம் முழுவதும் 5.73 கோடி பேருக்கு பூத் சிலிப் விநியோகம் தொடக்கம்

ஏப்.18-க்குள் முடிக்க தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு
சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, வாக்காளர்களுக்கான 'பூத் சிலிப்' வழங்கும் பணி நேற்று தொடங்கியது. மாநகராட்சி தேர்தல் பணியாளர்கள் சென்னை அயனாவரம் பகுதியில் வீடு வீடாக சென்று 'பூத் சிலிப்' வழங்கினர்.படம்: எஸ்.சத்தியசீலன்

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, வாக்காளர்களுக்கான 'பூத் சிலிப்' வழங்கும் பணி நேற்று தொடங்கியது. மாநகராட்சி தேர்தல் பணியாளர்கள் சென்னை அயனாவரம் பகுதியில் வீடு வீடாக சென்று 'பூத் சிலிப்' வழங்கினர்.படம்: எஸ்.சத்தியசீலன்

Updated on
1 min read

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி 5.73 கோடி பேருக்கு பூத் சிலிப் விநி​யோகிக்கும் பணி பெரும்​பாலான மாவட்​டங்​களில் நேற்று தொடங்​கியது. இப்​பணி​களை ஏப்​.18-ம் தேதிக்​குள் முடிக்க அனைத்து மாவட்ட தேர்​தல் அதி​காரி​களுக்​கும் தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் உத்​தர​விட்​டுள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 234 தொகு​தி​களில் 4,023 வேட்​பாளர்​கள் போட்​டி​யிடு​கின்​றனர். சென்​னை​யில் உள்ள 16 தொகு​தி​களில் 419 வேட்​பாளர்​கள் போட்​டி​யிடு​கின்​றனர். தற்​போது தமிழகத்​தில் 2 கோடியே 80 லட்​சத்து 30,658 ஆண், 2 கோடியே 93 லட்​சத்து 4,905 பெண், 7,728 மூன்​றாம் பாலினத்​தினர் என மொத்​தம் 5 கோடியே 73 லட்​சத்து 43,291 வாக்​காளர்​கள் உள்​ளனர்.

இவர்​கள் தேர்​தலில் எளி​தாக வாக்​களிக்​கும் வித​மாக, தமிழகம் முழு​வதும் உள்ள 75 ஆயிரம் வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​கள் மூல​மாக, வாக்​காளர்​களின் வீடு​களுக்கே நேரடி​யாகச் சென்று வாக்​காளர் தகவல் சீட்​டு​களை (பூத் சிலிப்) விநி​யோகிக்​கும் பணி தமிழகத்​தின் பெரும்​பாலான மாவட்​டங்​களில் நேற்று தொடங்​கியது.

சென்னை மாவட்​டத்​தில் 975 அமை​விடங்​களில் 4,085 வாக்​குச்​சாவடி மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இம்​மாவட்​டத்​தி​லுள்ள 16 தொகு​தி​களி​லும் பூத் சிலிப் விநி​யோகம் நேற்று தொடங்​கியது. இப்​பணி​களை ஏப்​.18-ம் தேதிக்​குள் முடிக்​கு​மாறு அனைத்து மாவட்ட தேர்​தல் அதி​காரி​களுக்​கும் மாநில தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் உத்​தர​விட்​டுள்​ளார். இப்​பணி​களை அந்​தந்த தொகுதி தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள் நேரில் சென்று பார்​வை​யிட்​டு, ஆலோ​சனை​களை வழங்கி வரு​கின்​றனர்.

வாக்​காளர்​களுக்கு பூத் சிலிப் வழங்​கும்​போது, அவர்​களின் கையெழுத்து அல்​லது விரல் அடை​யாளத்​தைப் பெற தேர்​தல் ஆணை​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. விநி​யோகிக்​கப்​ப​டாத வாக்​காளர் தகவல் சீட்டு அனைத்​தும் வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​கள் மூல​மாக தேர்​தல் நடத்​தும் அலு​வலரிடம் திருப்பி வழங்​க​வும், அவற்றை உறை​யில் பாது​காப்​பாக வைத்​திட​வும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

தேர்​தல் ஆணை​யம் அறி​வுறுத்​தலின்​படி, வாக்​காளர்​களின் வசதியை அதி​கரிக்​கும் நோக்​கில், பூத் சிலிப் வடிவ​மைப்​பில் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. மாற்​றியமைக்​கப்​பட்ட வடிவ​மைப்​பில் வாக்​காளரின் வரிசை எண் மற்​றும் பகுதி எண் ஆகியவை சீட்​டின் மேல் வலது மூலை​யில் பெரிய எழுத்​துரு​வில் தெளி​வாக குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

இம்​மாற்​றம் மூலம் வாக்​காளர்​கள் தங்​கள் வாக்​குச்​சாவடியை எளி​தில் அடை​யாளம் காண​வும், வாக்​குப்​ப​திவு அலு​வலர்​கள் வாக்​காளர் பெயரை வாக்​காளர் பட்​டியலில் விரை​வாக கண்​டறிய​வும் உதவி​யாக இருக்​கும்​படி அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த பூத் சிலிப் வாக்​களிப்​ப​தற்​கான அடை​யாள ஆவண​மாக ஏற்​றுக்​கொள்​ளப்பட மாட்​டாது என்று தேர்​தல் அதி​காரி​கள் தெரிவித்​துள்​ளனர்.

<div class="paragraphs"><p>சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, வாக்காளர்களுக்கான 'பூத் சிலிப்' வழங்கும் பணி நேற்று தொடங்கியது. மாநகராட்சி தேர்தல் பணியாளர்கள் சென்னை அயனாவரம் பகுதியில் வீடு வீடாக சென்று 'பூத் சிலிப்' வழங்கினர்.படம்: எஸ்.சத்தியசீலன்</p></div>
“கொள்கையற்ற கூட்டத்தை விரட்டியடிக்க வேண்டும்” - பரமக்குடியில் ஸ்டாலின் பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in