மாவட்ட அளவில் கணினி குலுக்கலில் பிரிக்கப்பட்ட இவிஎம் இயந்திரங்கள் தொகுதிவாரியாக அனுப்பும் பணி தொடக்கம்

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இன்று பயிற்சி
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கிடங்கில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னை மாவட்ட சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக போலீஸார் பாதுகாப்புடன் அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது. | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கிடங்கில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னை மாவட்ட சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக போலீஸார் பாதுகாப்புடன் அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது. | படம்: எஸ்.சத்தியசீலன் |

Updated on
1 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மாவட்ட அளவில் கணினி குலுக்​கல் மூலம் பிரிக்​கப்​பட்ட வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள், தொகுதிவாரியாக அனுப்​பும் பணி நேற்று தொடங்​கியது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பயன்​படுத்த வேண்​டிய மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் (இவிஎம்) மற்​றும் வாக்​காளர், தான் செலுத்​திய வாக்​கினை சரி​பார்க்​கும் கருவி​களின் (வி​வி​பாட்) முதற்​கட்ட பரிசோதனைக்கு பிறகு, அந்​தந்த மாவட்ட தேர்​தல் அதி​காரி​கள் கட்​டுப்​பாட்​டில் பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டுள்​ளன.

இந்த தேர்​தலில் மொத்​தம் தலா 90 ஆயிரம் கட்​டுப்​பாட்டு கருவி​கள் மற்​றும் வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள், 97,500 விவி​பாட் கருவி​கள் பயன்​படுத்​தப்பட உள்​ளன.

இதில் பயன்​பாடு போக, பழு​தாகும்​போது மாற்​று​வதற்​கான 20 சதவீத இருப்பு வைப்பு இயந்​திரங்​களும் அடங்​கும். மாவட்ட அளவில் வைக்​கப்​பட்​டுள்ள இந்த இயந்​திரங்​களை, அங்​கீகரிக்​கப்​பட்ட கட்சி பிர​தி​நி​தி​கள் மற்​றும் மாவட்ட தேர்​தல் அதி​காரி​கள் முன்​னிலை​யில் கணினி குலுக்​கல் முறை​யில் தொகு​தி​வாரி​யாக பிரிக்​கும் பணி மார்ச் 23-ல் நடை​பெற்​றது.

அதைத் தொடர்ந்​து, இயந்​திரங்​களை தொகு​தி​வாரி​யாக, தேர்​தல் நடத்​தும் அலு​வலர் அலு​வல​கம் செயல்​படும் வைப்​பறைக்​குக் கொண்டு செல்​லும் பணி, அனைத்து அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்சி பிர​தி​நி​தி​கள் முன்​னிலை​யில் நேற்று தொடங்​கியது.

அதன்​படி சென்​னை​யில் மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் தலை​மை​யில் நடை​பெற்​றது.

இதே​போன்று அனைத்து மாவட்​டங்​களி​லும், அந்​தந்த மாவட்ட தேர்​தல் அதி​காரி​கள் தலை​மை​யில் பணி​கள் நேற்று தொடங்​கின.

தமிழகம் முழு​வதும் தேர்​தல் பணி​யில் ஈடு​படும் அனைத்து வாக்​குச்​சாவடி அலு​வலர்​களுக்​கும், அந்​தந்த தேர்​தல் நடத்​தும் அதி​காரி அலு​வலக வளாகத்​தில்​ இன்​று பயிற்​சிகள்​ வழங்​கப்​பட உள்ளன.

<div class="paragraphs"><p>சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கிடங்கில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னை மாவட்ட சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக போலீஸார் பாதுகாப்புடன் அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது. | படம்: <em>எஸ்.சத்தியசீலன்</em> |</p></div>
தமிழகத்தில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்: பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in