திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட அறங்காவலர்களை ராஜினாமா செய்ய அறிவுறுத்தல்

அறநிலையத் துறை வாய்மொழி உத்தரவிட்டதாக தகவல்
திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட அறங்காவலர்களை ராஜினாமா செய்ய அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட கோயில் அறங்காவலர்களை ராஜினாமா செய்யும்படி அறநிலையத்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கோயில்களின் சொத்துகளைப் பாதுகாக்கவும், ஆன்மிக பணிகளைச் சிறப்பாக நடத்தவும் அறங்காவலர் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. அறநிலையத் துறையின் 1959-ம் ஆண்டு சட்டப்படி, கோயில் நிர்வாகத்தில் அறங்காவலர் குழுவுக்குதான் அதிகாரங்கள் உள்ளன.

செயல் அலுவலரும் அறங்காவலர் குழுவின் கீழ் பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் ஆண்டு வருவாய் ரூ.10 லட்சத்துக்கும் மேல் உள்ள கோயில்களுக்கான அறங்காவலர்களை மாநில அரசு நியமிக்கும்.

அதற்கு குறைவாக வருவாய் உள்ள கோயில்களுக்கு அறநிலையத்துறை ஆணையரும், ரூ.2 லட்சம் வரை வருவாய் உள்ள கோயில்களுக்கு அறநிலையத்துறை இணை ஆணையரும் அறங்காவலர் குழுவை நியமிப்பார்கள்.

பரம்பரை அல்லாத அறங்காவலர்களைத் தேர்வு செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் 'மாவட்ட அறங்காவலர் குழு' செயல்படுகிறது. இக்குழுவில் ஒரு பெண் உறுப்பினர், எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஒரு நபர் மற்றும் 3 தகுதிவாய்ந்த பொது உறுப்பினர்கள் என மொத்தம் 5 பேர் இடம் பெறுவர்.

இவர்களின் பதவிக்காலம் 2 ஆண்டு கள் ஆகும். கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட அறங்காவலர்கள் மூலம் கோயில்களில் பல்வேறு திருப்பணிகளும், வளர்ச்சித் திட்டங்களும் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய கோயில்களின் பரம்பரை அல்லாத அறங்காவலர்களை உடனடியாக பதவியை ராஜினாமா செய்யுமாறு அறநிலையத்துறை தரப்பிலிருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளி யாகி உள்ளது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில் அறங்காவலர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்து வருகின்றனர். இதனால் விரைவில் புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்படலாம் அல்லது நிர்வாக ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப் படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட அறங்காவலர்களை ராஜினாமா செய்ய அறிவுறுத்தல்
பாஜகவில் இருந்து அமர்பிரசாத் ரெட்டி விலகல்? - இன்று முடிவெடுக்கிறார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in