விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: 25 காவல் அதிகாரிகளுக்கு டிஐஜி பாராட்டு

வேடநத்தம் மாணவி கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட  25 காவல் அதிகாரிகளுக்கு திருநெல்வேலி சரக டிஐஜி சரவணன் நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

வேடநத்தம் மாணவி கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட 25 காவல் அதிகாரிகளுக்கு திருநெல்வேலி சரக டிஐஜி சரவணன் நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Updated on
1 min read

தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே 17 வயது பள்ளி மாணவி கொலை செய்​யப்​பட்ட சம்​பவம் தமிழ்​நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்​படுத்​தி​யது. இதுதொடர்​பாக போலீ​ஸார் 10 தனிப்​படைகளை அமைத்து தீவிர​மாக தேடி, இந்த கொலையில் தொடர்​புடைய நபரை கைதுசெய்து சிறை​யில் அடைத்​தனர்.

இதையடுத்து இந்த வழக்கில் சிறப்​பாக செயல்​பட்ட 25 காவல் அதி​காரி​களுக்கு திருநெல்​வேலி சரக டிஐஜி சரவணன் நற்​பணி சான்​றிதழ் வழங்கி பாராட்டு தெரி​வித்​தார்.

காவல் ஆய்​வாளர்​கள் விளாத்​தி​குளம் சக்​திவேல், உமா மகேஸ்​வரி, சங்​கரலிங்க புரம் அசோக்​பாபு, புதூர் ராஜேஷ், தூத்​துக்​குடி காசி​பாண்​டியன், முறப்​ப​நாடு ஹரிஹரன், கோவில்​பட்டி மேற்கு நவநீதகிருஷ்ணன், தரு​வை​குளம் சைரஸ், சைபர் குற்​றப்​பிரிவு சாந்​தி, ஆறு​முகநேரி திலீபன், மாசார்​பட்டி பவுல் ஏசு​தாசன், உதவி ஆய்​வாளர்​கள் காவல் கட்​டுப்​பாட்டு அறைராஜபிரபு, மணி​மாறன், கோவில் பட்டி மேற்கு சண்முகம், விளாத்​தி​குளம் மாதவ​ராஜா, நாலாட்​டின் ​புதூர் சுந்​தர், சிப்​காட் பெபின் செல்வ பிரிட்​டோ, ஸ்ரீவை​குண்​டம் செந்​தில்குமார், முறப்​ப​நாடு சுப்​பு​ராஜ், ஆறு​முகநேரி முத்​து​ ராஜா, ஆழ்​வார்​திருநகரி பாலன், தூத்​துக்​குடி தென்​பாகம் காவு​ராஜன், சைபர் குற்​றப்​பிரிவு சுதாக ரன், அச்​சுதன், மாவட்ட காவல் கட்​டுப்​பாட்டு அறை சிறப்பு உதவி ஆய்​வாளர் சுப்​பிரமணி​யன் ஆகிய 25 காவல்​ அதி​காரி​களும்​ பா​ராட்​டப்​பட்​டனர்​.

<div class="paragraphs"><p>வேடநத்தம் மாணவி கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட  25 காவல் அதிகாரிகளுக்கு திருநெல்வேலி சரக டிஐஜி சரவணன் நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.</p></div>
“ராகுல் காந்தி பாஜகவின் பி-டீம்” - கேரள முதல்வர் பினராயி விஜயன் சாடல்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in