சமூக ஆர்வலரை தாக்கினாரா பேரவை துணைத் தலைவர்? - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்களால் சர்ச்சை

கார்த்திக்

கார்த்திக்

Updated on: 
1 min read

திருச்சி: அடிப்​படை வசதி​கள் செய்து தரக் கோரி அளித்த மனு மீது நட​வடிக்கை எடுக்​கக் கோரி முறை​யிடச் சென்ற தன்னை சட்​டப்​பேரவை துணைத் தலை​வர் தாக்​கிய​தாக துறையூரைச் சேர்ந்த சமூக ஆர்​வலர் குற்​றம்​சாட்​டியுள்​ளார்.

திருச்சி மாவட்​டம் துறையூர் நக​ராட்சி 23-வது வார்டு பகுதி நெசவாளர் காலனியைச் சேர்ந்​தவர் கார்த்​திக்(45). சமூக ஆர்​வலரான இவர் தனது வார்டு பகுதி​யில் குடிநீர் விநியோகம், சாக்​கடை வசதி, சாலை வசதி உள்​ளிட்ட அடிப்​படை வசதி​கள் செய்து தரக் கோரி துறையூர் தொகுதி

எம்​எல்​ஏவும், சட்​டப்​பேரவை துணைத் தலை​வரு​மான ரவி சங்​கரிடம் அண்​மையில் மனு அளித்​துள்​ளார். இந்த மனுவின் மீது நட​வடிக்கை எடுக்​கப்​படாததால், ரவிசங்​கரை கார்த்​திக் செல்​போனில் அழைத்​த​தாகவும், ஆனால் ரவிசங்​கர் அழைப்பை ஏற்​க​வில்லை என்​றும் கூறப்​படு​கிறது.

இதையடுத்து, மண்​ணச்​சநல்​லூரில் உள்ள சட்​டப்​பேரவை துணைத் தலை​வர் ரவி சங்​கரின் வீட்​டுக்கு நேற்று முன்​தினம் இரவு சென்ற கார்த்​திக், தனது கோரிக்கை மனுவின் நிலை குறித்து கேட்​டுள்​ளார்.

அப்​போது ரவி சங்​கருக்​கும், கார்த்​திக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. அப்​போது, ரவி சங்​கர் தன்னை தாக்​கிய​தாகவும், இதில் காயம் ஏற்​பட்​ட​தாகவும் கூறி மண்​ணச்​சநல்​லூரில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் கார்த்​திக் சிகிச்​சைக்​காக சேர்ந்​தார். மேலும், இந்த தாக்​குதல் சம்​பவம் தொடர்​பான வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலானது.

அதன்​பின், சட்​டப்​பேரவை துணைத் தலை​வர் ரவி சங்​கர் அரு​கில் அமர்ந்​த​படி கார்த்​திக் பேசும் வீடியோ ஒன்று நேற்று வெளியானது. அதில் கார்த்​திக் பேசும்​போது, “சட்​டப்​பேரவை துணைத் தலை​வர் ரவிசங்​கரை நான் சந்​திக்க சென்​றபோது ஏற்​பட்ட கூட்ட நெரிசலில் தவறி விழுந்து விட்​டேன். என்னை யாரும் தாக்​க​வில்லை” எனக் கூறி​யிருந்​தார்.

அதன்​பின், சிறிது நேரம் கழித்து கார்த்​திக் மட்​டும் பேசுவது போன்ற ஒரு வீடியோ வெளியானது. அதில் கார்த்​திக், “என்னை சட்​டப்​பேரவை துணைத் தலை​வர் ரவி சங்​கர் மிரட்​டித்​தான் அந்த வீடியோவை எடுத்​தார். ரவி சங்​கரும், மண்​ணச்​சநல்​லூர் இன்ஸ்​பெக்​டர் கிருபாநி​தி​யும் நான் எப்​படி பேச வேண்​டும் என எழுதிக் கொடுத்​தனர். அப்​படி பேசவில்லை​யெனில் உன்னை உயிரோடு விட​மாட்​டேன் என என்​னிடம் மிரட்​டினர். என் உயிரை​யும், குடும்​பத்​தையும் காப்​பாற்​றிக் கொள்​ளவே அவ்​வாறு கூறினேன். என்னை பேச வைத்து ஆறு, ஏழு டேக் வீடியோ பதிவு செய்​தனர். அந்த வீடியோவைத்​தான் வெளி​யிட்​டுள்​ளனர்” எனக் கூறியுள்​ளார். இந்த விவகாரம் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

<div class="paragraphs"><p>கார்த்திக்</p></div>
“அமெரிக்க இடைத்தேர்தல் நேர்மையாக நடந்ததா?” - வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து ட்ரம்ப் சந்தேகம்

X