வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாய உத்தரவை எதிர்த்த தினகரன் மனு தள்ளுபடி

டிடிவி தினகரன்|கோப்புப் படம்

டிடிவி தினகரன்|கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: கடந்த 2016 நவம்​பரில் ரூ.500 மற்​றும் ரூ. 1000 நோட்​டு​கள் பணம​திப்​பிழப்பு சட்​டத்​தின் கீழ் செல்​லாதவை என மத்​திய அரசு அறி​வித்​தது. மதிப்​பிழப்பு செய்​யப்​பட்ட இந்த ரூபாய் நோட்​டுக்​களை பயன்​படுத்தி வி.கே.சசிகலா பெரம்​பூரில் உள்ள ஸ்பெக்ட்​ரம் வணிக வளாகத்தை விலைக்கு வாங்​கி​யுள்​ள​தாக 2017-ம் ஆண்டு வரு​மான வரித்​துறை நடத்​திய சோதனை​யின் மூலம் தெரிய​வந்​தது.

அதையடுத்து அந்த வணிக வளாகத்​தின் உரிமை​யாளர்​களான கங்கா பவுண்​டேஷன், பாலாஜி, வி.எஸ்​.ஜெ.தினகரன் ஆகியோர் மீது பினாமி சட்​டத்​தின் கீழ் நடவடிக்கை எடுக்​கப்​பட்டு அவர்​களுக்கு சொந்​த​மான சொத்​துகள் முடக்​கப்​பட்​டன.

இந்​நிலை​யில் வி.எஸ்​.ஜெ.​தினகரனுக்கு சொந்​த​மான ரூ.18 கோடி மதிப்​புள்ள சொத்​துக்​களின் முடக்​கத்தை உறுதி செய்ய மறுத்து வரு​மான வரித்​துறை தீர்ப்​பாய அதி​காரி உத்​தர​விட்​டார். அதை எதிர்த்து வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் தரப்​பில் வரு​மான வரித்​துறை மேல்​முறை​யீட்டு தீர்ப்​பா​யத்​தில் 763 நாட்​கள் கால​தாமத​மாக மேல்​முறை​யீடு செய்​யப்​பட்டது.

இந்த கால​தாமதத்தை ஏற்​றுக்​கொண்டு மேல்​முறை​யீட்டு தீர்ப்​பா​யம் விசா​ரணை மேற்​கொண்​டது. இதை எதிர்த்து வி.எஸ்​.ஜெ.​தினகரன் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் விஜய் நாராயணும், வரு​மான வரித்​துறை தரப்​பில் சிறப்பு வழக்​கறிஞர் எம்​.ஷீலா​வும் ஆஜராகி வாதிட்​டனர்.

இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், “வரு​மான வரித்​துறை மேல் முறை​யீட்டு தீர்ப்​பா​யம், தனக்​குள்ள சிறப்பு அதி​காரத்​தைப் பயன்​படுத்தி 763 நாட்​கள் கால தாமதத்தை ஏற்று பிறப்​பித்​துள்ள உத்​தர​வில் தலை​யிட முடி​யாது. மேல் முறை​யீட்டு தீர்ப்​பா​யத்​தின் உத்​தரவு தன்​னிச்​சை​யானது எனக்​கூற எந்த முகாந்​திர​மும் இல்​லை” எனக்​கூறி வி.எஸ்​.ஜெ.​தினகரன் தாக்​கல் செய்த மனுவை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டுள்​ளனர்.

<div class="paragraphs"><p>டிடிவி தினகரன்|கோப்புப் படம்</p></div>
“சுந்தர்.சி-யின் வருகை ஒரு ‘படித்த’ அரசியல்வாதியை நடுங்க வைத்துள்ளது” - குஷ்பு விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in