ஒற்றுமையை வலுப்படுத்தும் பொங்கல் பண்டிகை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சென்னை ஐஐடி-யில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ் பாரம்பரிய முறைப்படி  வேட்டி, சட்டை, அங்கவஸ்திரம் அணிந்து பொங்கல் வைத்தார்.  அருகில், ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி மற்றும் பேராசியர்கள் உள்ளனர்.

சென்னை ஐஐடி-யில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை, அங்கவஸ்திரம் அணிந்து பொங்கல் வைத்தார். அருகில், ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி மற்றும் பேராசியர்கள் உள்ளனர்.

Updated on
1 min read

சென்னை: சென்னை ஐஐடி​யில் நடை​பெற்ற பொங்​கல் திரு​விழா​வில் மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான், தமிழ் பாரம்​பரிய முறைப்​படி வேட்​டி, சட்டை அணிந்து பொங்​கல் வைத்து மகிழ்ந்​தார். நாட்​டின் ஒற்​றுமையை வலுப்​படுத்​தும் வித​மாக பொங்​கல் பண்​டிகை கொண்​டாடப்​படு​வ​தாக அவர் தெரி​வித்​தார்.

சென்னை ஐஐடி ஊழியர் மன்​றம் மற்​றும் முத்​தமிழ் மன்​றம் சார்​பில், பொங்​கல் திரு​நாள் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இவ்​விழா​வில், மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் தமிழ் பாரம்​பரிய முறைப்​படி வேட்​டி, சட்டை மற்​றும் அங்​கவஸ்​திரம் அணிந்து சிறப்பு விருந்​தின​ராகக் கலந்​து கொண்​டார்.

நிகழ்ச்சி நடை​பெற்ற ஐஐடி சமூக கூடத்​துக்கு அமைச்​சர் வருகை தந்​த​போது, அவருக்கு பாரம்​பரிய தமிழ்க் கலாச்​சார முறைப்​படி பறை, மயி​லாட்​டம், பொய்க்​கால் குதிரை உள்​ளிட்ட கிராமிய நடனங்​களு​டன் உற்​சாகவரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

கோலமிட்​டு, அலங்​கரித்து வைக்​கப்​பட்ட பொங்​கல் பானை​யில் மத்​திய அமைச்​சர் பொங்​கல் வைத்த போது, ஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி மற்​றும் பேராசிரியர்​கள், ஊழியர்​கள், மாணவ-​மாணவி​கள் கைதட்டி மகிழ்ச்​சியை வெளிப்​படுத்​தினர். பொங்​கல் திரு​நாளில் பண்​டிகை உணர்வை பிர​திபலிக்​கும் வகை​யில், ஐஐடி நிர்​வாகத்​தினர் உரு​வாக்​கிய பிரம்​மாண்ட பொங்​கல் கோலத்தை அமைச்​சர் பார்​வை​யிட்​டார். தொடர்ந்​து, ஐஐடி ஊழியர்​களுக்கு பொங்​கல் பரிசுத் தொகுப்​பு​களை வழங்​கி​னார்.

இந்த விழா​வில், அமைச்​சர் பேசியதாவது: தமிழகத்​துக்கு வந்து பொங்​கல் விழாவை கொண்​டாடு​வ​தில் பெரு​மகிழ்ச்சி அடைகிறேன். அறு​வடைத் திரு​நாளான பொங்​கல் விழா இந்​தி​யா​வின் பல்​வேறு மாநிலங்​களில் வெவ்​வேறு பெயர்​களில் கொண்​டாடப்​படு​கிறது. அஸாம் மற்​றும் வடகிழக்கு மாநிலங்​களில் பிஹு என்ற பெயரிலும் பஞ்​சாபில் லோஹிரி என்ற பெயரிலும் குஜ​ராத், மகா​ராஷ்டிரா உள்​ளிட்ட மேற்கு பிராந்​தி​யத்​தில் உத்​த​ராயன் என்​றும் மக்கள் கொண்​டாடி மகிழ்​கிறார்​கள்.

நான் சார்ந்​துள்ள கிழக்கு பிராந்​தி​யத்​தில் மகர சங்​க​ராந்தி என்ற பெயரில் பொங்​கல் விழாவை கொண்​டாடி வருகிறோம். தமிழகம் உள்​ளிட்ட தென்​னிந்​தியா முழு​வதும் பொங்​கல் பண்டிகையாகக் கொண்​டாடப்​படு​கிறது. நாட்​டின் ஒற்​றுமையை பொங்​கல் பண்​டிகை வலுப்​படுத்​துகிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

பின்னர் ஐஐடி இயக்​குநர் காமகோடி வாழ்த்​திப் பேசும் போது, “விவ​சா​யத்​தை​யும் அதற்கு உறு​துணை​யாக இருக்​கும் மாடு​களை​யும் கவுரவிக்​கும் வகை​யில் பொங்​கல் திரு​நாள் கொண்​டாடப்​படு​கிறது. பொங்​கல் விழா அனை​வருக்​கும் நம்​பிக்​கை​யின் புதிய சக்​தியை அளிக்​கிறது” என்றார்.

பொங்​கல் விழா​வின் பாரம்​பரிய கொண்​டாட்​ட​மான உறியடி நிகழ்ச்​சி​யிலும் மத்​திய அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பங்​கேற்று மகிழ்​ந்​தார்​.

<div class="paragraphs"><p>சென்னை ஐஐடி-யில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ் பாரம்பரிய முறைப்படி  வேட்டி, சட்டை, அங்கவஸ்திரம் அணிந்து பொங்கல் வைத்தார்.  அருகில், ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி மற்றும் பேராசியர்கள் உள்ளனர்.</p></div>
பொங்கல் பண்டிகை செழிப்பையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும்: தலைவர்கள் வாழ்த்து!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in