8 வயது சிறுமியை கடத்தும் முயற்சி முறியடிப்பு: சாமர்த்தியமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநரை டிஜிபி பாராட்டு

8 வயது சிறுமியை கடத்தும் முயற்சி முறியடிப்பு: சாமர்த்தியமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநரை டிஜிபி பாராட்டு
Updated on
1 min read

சென்னை: ஜார்க்​கண்ட் மாநிலத்​தைச் சேர்ந்​தவர் ஷனிஜல் தாஸ் (56). இவர் தனது மனைவி மற்​றும் 2 குழந்​தைகளு​டன் திருச்​சி​யில் தங்கி விவ​சா​யத் தொழிலில் ஈடு​பட்டு வரு​கிறார்.

இவர் குடும்​பத்​தினருடன் சொந்த ஊருக்கு செல்​வதற்​காக சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​துக்கு கடந்த 1-ம் தேதி வந்​திருந்​தார். ரயில் புறப்​படும் நேரம் வரை சென்ட்​ரல் புறநகர் ரயில் நிலை​யம் அருகே உள்ள பிளாட்​பாரத்​தில் குடும்​பத்​தினருடன் தூங்​கிக் கொண்​டிருந்​தார்.

கடந்த 2-ம் தேதி அதி​காலை 3 மணி அளவில் அங்கு வந்த மர்ம நபர், தாயருகே தூங்​கிக் கொண்​டிருந்த 8 வயது சிறுமியை தோளில் தூக்​கிக்​கொண்டு நடந்து சென்​றுள்​ளார். இதைப் பார்த்து சந்​தேகமடைந்த அந்த வழி​யாக சென்ற ஆட்டோ ஓட்​டுநர், இதுகுறித்து யானைக்​க​வுனி போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தார்.

தகவலின் பேரில் போலீ​ஸார் விரைந்து வந்து விசா​ரித்​த​தில், சிறுமி கடத்​திச் செல்​லப்​பட்​டது உறுதி செய்​யப்பட்​டது. இதையடுத்​து, சிறுமியை மீட்​டு, கடத்​திச் சென்ற நபரை பிடித்து விசா​ரித்ததில் கடத்​தி​ய​வர் திரு​வள்​ளூர் மாவட்​டம், பொன்​னேரியைச் சேர்ந்த பெயின்​டர் சசிகு​மார் (42) என்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, அவரை போலீ​ஸார் கைது செய்​தனர். மீட்​கப்​பட்ட சிறுமி பெற்​றோரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டார். ஆட்டோ ஓட்​டுந​ரான பெரியமேட்​டைச் சேர்ந்த முரு​க​னின் (45) சாமர்த்​தி​யத்​தால் சிறுமி கடத்​தல் தடுக்​கப்​பட்​டது.

மேலும், குற்​ற​வாளி​யும் கைது செய்​யப்​பட்​டார். இதையறிந்த டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால், நேற்று டிஜிபி அலு​வல​கத்துக்கு முருகனை அழைத்து பாராட்டி சான்​றிதழ் வழங்​கி​னார்.

இதுகுறித்து டிஜிபி கூறுகை​யில், ‘ஆட்டோ ஓட்​டுநர் முரு​க​னின் துரித​மான நடவடிக்கை மற்​றும் பொதுநல அக்​கறை ஒருசிறுமி​யின் பாது​காப்பை உறுதி செய்​துள்​ளது. மேலும், குற்​றம் நடை​பெறு​வதை தடுக்​க​வும் உதவி​யுள்​ளது.

அவரது செயல், பொது​மக்​களின் விழிப்​புணர்வு மற்​றும் காவல் துறை​யினருடன் இணைந்த ஒத்​துழைப்பு சமூக பாது​காப்பை வலுப்​படுத்​து​வ​தில் எவ்​வளவு முக்​கிய​மானது என்​பதை எடுத்​துக் காட்​டும் சிறந்த முன்​னு​தா​ரண​மாகும்​’ என்​று தெரிவித்​தார்​.

8 வயது சிறுமியை கடத்தும் முயற்சி முறியடிப்பு: சாமர்த்தியமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநரை டிஜிபி பாராட்டு
ரூ.3.23 கோடி முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜராகவில்லை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in