போதைப் பொருள் தடுப்புப் படைக்கு 55 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 900 போலீஸார் நியமனம்: டிஜிபி உத்தரவு

போதைப் பொருள் தடுப்புப் படைக்கு 55 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 900 போலீஸார் நியமனம்: டிஜிபி உத்தரவு
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள போதைப் பொருள் தடுப்புப் படைக்கு 55 இன்ஸ்பெக் டர்கள் உள்பட 900 போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பிறப்பித்துள்ளார்.

தமிழக முதல்வராக மே 10-ம் தேதி விஜய் பொறுப்பேற்ற போது, போதை பொருள் தடுப்புப்படை உருவாக்குவது உள்ளிட்ட 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இந்த படை முதல்வரின் நேரடி கண்காணிப்பில் செயல்படுகிறது. இதற்காக, தமிழகம் முழுவதும் 65 காவல் நிலையங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குள் 12 காவல் நிலையங்கள் அமைக் கப்படுகின்றன. சென்னை தவிர்த்து 37 மாவட்டங்களில் தலா ஒரு போதைப் பொருள் தடுப்புப் படை காவல் நிலையம் உருவாக்கப்பட உள்ளது.

கூடுதல் டிஜிபி தலைமையில் செயல்பட உள்ள இந்த பிரிவில், ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் ஒரு இன்ஸ்பெக்டர், 4 எஸ்ஐ மற்றும் 20 போலீஸார் வீதம் மொத்தம் 65 இன்ஸ்பெக்டர்கள், 260 எஸ்ஐக்கள், 1,300 போலீஸார் நியமிக்க திட்டமிடப்பட்டது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காவல் நிலையங்களுக்கு அதிகாரிகள் மற்றும் போலீஸாரை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தற்போது 55 இன்ஸ்பெக்டர்கள், 65 எஸ்ஐக்கள் மற்றும் 780 சிறப்பு எஸ்ஐக்கள், தலைமைக் காவலர்கள், முதல் நிலை காவலர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 900 பேர் பிற காவல் பிரிவுகளில் இருந்துபணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பிறப்பித்துள்ளார். மேலும், பணியிட மாற்றம் செய்யப்பட்ட போலீஸார் உடனடியாக தங்களது புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

போதைப் பொருள் தடுப்புப்படையில் நியமிக்கப்படும் அதிகாரிகள் மற்றும் போலீஸார் குறைந்தது 3 ஆண்டுகள் அந்த பிரிவில் பணியாற்ற வேண்டும். அதன்பிறகு விருப்பத்தின் அடிப்படையில் மேலும் 5 ஆண்டுகள் வரை பணிக் காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம்.

இந்தப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் போலீஸாரை வேறு எந்த சட்டம், ஒழுங்கு பணிகளுக்கோ அல்லது பாதுகாப்புப் பணிகளுக்கோ பயன்படுத்தக் கூடாது என்றும், போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டும் என்றும் அரசு ஏற் கெனவே உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் தடுப்புப் படைக்கு 55 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 900 போலீஸார் நியமனம்: டிஜிபி உத்தரவு
காவல் துறையில் 10,000 புதிய பணியிடங்கள்: 6 மாதங்களில் நிரப்ப முதல்வர் விஜய் உத்தரவு

X