தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி - காவல் ஆணையர் ஆலோசனை

தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி - காவல் ஆணையர் ஆலோசனை
Updated on
1 min read

சென்னை: தேர்​தல் பாது​காப்பு ஏற்​பாடு​கள் குறித்து டிஜிபி மற்​றும் சென்னை காவல் ஆணை​யர் நேற்று ஆலோ​சனை நடத்​தினர். தமிழக சட்​டப்​பேரவை தேர்தல் வாக்​குப்​ப​திவு வரும் 23-ம் தேதி ஒரே கட்​ட​மாக நடை​பெற உள்​ளது.

இதற்​கான அனைத்து ஏற்​பாடு​களை​யும் தேர்​தல் ஆணை​யம் முழு​வீச்​சில் செய்​துள்​ளது. அரசி​யல் கட்​சி​யினர் பணம், பரிசுப் பொருட்​களை கொடுத்து வாக்​கு​களைக் கவர்​வதை தடுக்க தொகுதி வாரி​யாக பறக்​கும் படைகள், நிலை கண்​காணிப்பு குழுக்​கள் அமைக்​கப்​பட்டு சோதனை​கள் நடத்​தப்​படு​கின்​றன.

ரூ.50 ஆயிரத்​துக்​கும் மேல், ஆவணங்​கள் இல்​லாமல் கொண்டு செல்​லும் பணம் மற்​றும் பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

இதற்கிடையே, சென்​னை​யில் வாக்​குப்​ப​தி​வின்​போது மேற்​கொள்ள வேண்​டிய பாது​காப்பு ஏற்​பாடு​கள் குறித்து டிஜிபி சந்​தீப் ராய் ரத்​தோர், சென்னை காவல் ஆணை​யர் அருண் ஆகியோர் நேற்று ஆலோ​சனை நடத்​தினர்.

இந்த ஆலோ​சனைக் கூட்​டத்​தில் உயர் போலீஸ் அதி​காரி​கள் கலந்​து​ கொண்​டனர். மேலும், பிரச்​சா​ரத்​தின்​போது வேட்​பாளர்​கள் விதி​மீறலில் ஈடு​ப​டா​மல் இருக்​க​வும், மீறி​னால் வழக்​குப்​ப​திவு செய்​வதற்​கும் ஏது​வாக பிரச்​சா​ரம் உள்​ளிட்ட அனைத்​து நகர்​வு​களை​யும்​ வீடியோ பதிவு செய்​யும்​ பணியும்​ முடுக்​கி விடப்​பட்​டுள்​ளது.

முன்னதாக, புதிய தலைமைச் செயலாளர் சாய்குமாரை, தலைமை செயலகத்தில் டிஜிபி சந்​தீப் ராய் ரத்​தோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி - காவல் ஆணையர் ஆலோசனை
மம்தா கேள்வி எழுப்பியதால்தான் தலைமை செயலாளர் மாற்றம்: அமைச்சர் கே.என்.நேரு புது விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in