“நேற்று கட்சி தொடங்கியோருக்கு இன்று முதல்வராக ஆசை” - விஜய் மீது உதயநிதி தாக்கு

“நேற்று கட்சி தொடங்கியோருக்கு இன்று முதல்வராக ஆசை” - விஜய் மீது உதயநிதி தாக்கு
Updated on
1 min read

நேற்று கட்சி தொடங்கி இன்று முதல்​வ​ராக வேண்​டும் என சிலர் நினைக்​கின்​ற​னர் என்று தவெக தலை​வர் விஜய்யை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் மறை​முக​மாக தாக்​கிப் பேசி​னார்.

திரா​விடர் கழக தலை​வர் கி.வீரமணி​யின் 93வது பிறந்​த​நாளை முன்​னிட்டு அவரது இல்​லத்​துக்கு நேரில் சென்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அவருக்கு வாழ்த்து தெரி​வித்​தார். முதல்​வ​ருடன் அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, மா.சுப்​பிரமணி​யன், அன்​பில் மகேஸ் ஆகி​யோர் உடன் இருந்​தனர். மேலும் சென்னை வேப்​பேரி​யில் உள்ள பெரி​யார் திடலில் நடை​பெற்ற பிறந்​த​நாள் விழா​வில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பங்​கேற்று வீரமணிக்கு பொன்​னாடை அணி​வித்து புத்​தகம் வழங்கி வாழ்த்து தெரி​வித்​தார்.

இந்​நிகழ்ச்​சி​யில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பேசி​ய​தாவது: பெரி​யா​ரின் கொள்கை பேர​னாக இங்கே நான் வந்​துள்​ளேன். பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்து திரா​விட கழகத்​தினர் இங்கே வந்​துள்​ளனர். உங்​களை பார்க்​கும் போது எனக்கு வியப்​பாக உள்​ளது. ஒரு சிலர் நேற்று கட்சி தொடங்கி இன்று முதல்​வ​ராக வேண்​டும் என நினைக்​கின்​ற​னர். ஆனால் ஒரு கவுன்​சிலர் பதவி கூட வேண்​டாம். எங்​களுக்கு கொள்​கை, சமு​தாய தொண்டு தான் முக்​கி​யம் என இத்​தனை ஆண்​டு​கள் பணி​யாற்​றுகின்​ற​னர்.

83 ஆண்​டு​கால பொது​வாழ்க்கை வாயி​லாக திரா​விட இயக்​கத்​தின் நேரடி வரலாற்று சாட்​சி​யாக திரா​விடர் கழக தலை​வர் வீரமணி உள்​ளார். இன்று பெரி​யார் கொள்​கை​களை நாடு முழு​வதும் பரவி உள்​ளது, ஏன் உலகமே கொண்​டாடி வரு​கிறது, இன்​றைய தலை​முறை​யினர் பெரி​யாரை படிக்க ஆரம்​பித்​துள்​ளனர், கொள்​கை​களை ஏற்​றுக்​கொள்ள தொடங்​கி​யுள்​ளனர். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் சேகர்​பாபு, மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ மற்​றும் திரா​விடர் கழக நிர்​​வாகிகள் கலந்து கொண்​டனர்.

“நேற்று கட்சி தொடங்கியோருக்கு இன்று முதல்வராக ஆசை” - விஜய் மீது உதயநிதி தாக்கு
செங்கோட்டையன் தவெக-வில் இணைய காரணம் யார்? - நயினார் நாகேந்திரன் புதுத் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in