செங்கோட்டையன் தவெக-வில் இணைய காரணம் யார்? - நயினார் நாகேந்திரன் புதுத் தகவல்

செங்கோட்டையன் தவெக-வில் இணைய காரணம் யார்? - நயினார் நாகேந்திரன் புதுத் தகவல்

Published on

சேகர்​பாபுவை சந்தித்த பிறகுதான் செங்கோட்​டையன் தவெக-வில் இணைந்​தார். ஆகவே, சேகர்​பாபுவின் ஆலோசனைப்​படிதான் அவர் தவெக-வில் இணைந்​திருக்​கி​றார்” என்றி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்​திரன் தெரிவித்​தார்.

உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் நடைபெறும் 4-வது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்​சிக்கு, தென்காசி காசி விஸ்வ​நாதர் கோயில் அருகில் இருந்து 15 வாகனங்​களில் யாத்ரீகர்கள் புறப்​பட்டுச் சென்றனர். இந்த பயணத்தை நயினார் நாகேந்​திரன் கொடியசைத்து தொடங்​கி​வைத்​தார். பின்னர் அவர் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்த இறந்துபோன 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்​பட்டன. அதுபோல், தமிழகத்தில் மறைந்த சுமார் 75 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருப்​ப​தாகச் சொல்கி​றார்கள். 2002-க்கு பின்னர் யாரெல்லாம் இறந்து போனார்களோ அவர்களது பெயர்கள் எல்லாம் வாக்காளர்கள் பட்டியலில் உள்ளன.

முதல்​வரின் கொளத்தூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் மட்டும், இறந்துபோன 10 ஆயிரம் பேரின் பெயர்கள் உள்ளன. அவற்றை நீக்கி​விடக்​கூடாது என்பதுதான் திமுக-வின் நோக்கம். முதல்வர் அதற்காகத்தான் நீதிமன்​றத்​துக்கு சென்றார். இறந்தவர்கள் பெயரை நீக்க வேண்டும், 18 வயது நிரம்​பிய​வர்கள் பெயரை பட்டியலில் சேர்க்க வேண்டும். அதற்காகத்தான் எஸ்ஐஆர் கொண்டு​வரப்​பட்டது. இதில் குளறுபடி எதுவும் இல்லை. முதல்​வர்தான் குளறுபடி செய்கி​றார்.

செங்கோட்​டையனை தவெகவுக்கு பாஜகதான் அனுப்​பியதாக கூறுவது உண்மையாக இருந்தால் அவர் ஏன் சேகர்​பாபுவை சந்திக்க வேண்டும்? சேகர்​பாபுவை சந்தித்த பிறகுதான் செங்கோட்​டையன் தவெக-வில் இணைந்​தார். ஆகவே, சேகர்​பாபுவின் ஆலோசனைப்படி தான் அவர் தவெக-வில் இணைந்​திருக்​கி​றார்.

அதிமுக ஆட்சியில் செங்கோட்​டையன் போக்கு​வரத்துத் துறை அமைச்​சராக, கல்வி அமைச்சராக இருந்​தபோது நல்லாட்சி இல்லையா? தவெக-வில் சேர்ந்த பின்னர், நல்லாட்சி தருவோம் என்று அவர் சொல்வதை மக்கள் எப்படி பார்ப்​பார்கள்? எந்த தனிப்பட்ட நபரையும் நம்பி எந்தக் கட்சியும் இல்லை. தேர்தலுக்கு முந்தைய நாள் கூட நிறைய மாற்றங்கள் வரலாம். தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் மதுரை ஆதினத்தை நேற்று மதுரையில் சந்தித்து பேசினர். பின்னர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்:

“தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. தேர்தல் என்று வரும்போது ஆட்சியில் இருப்பவர்கள் முந்தைய தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? இல்லையா? என்பதைத்தான் மக்கள் பார்ப்பார்கள். நான்காண்டு கால ஆட்சியில் சொத்து வரி, மின்சார வரி பல மடங்கு உயர்ந்துள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவில்லை. ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என ஆயிரம் முறை சொன்னார் அமைச்சர் துரைமுருகன். ஆனால் ஒரு தடுப்பணைகூட கட்டவில்லை.

இந்த தேர்தலில் பொங்கலுக்கு ரூ.5,000 தரப்போகிறார்கள். இது தொடர்பாக நான் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளேன். என் கோரிக்கையை முதல்வர் நிராகரிக்க மாட்டார். அரசு அவர்களிடம் இருப்பதால் ரூ.10 ஆயிரம்கூட கொடுக்க வாய்ப்புள்ளது. இது தேர்தலுக்கான அரசு. மாநிலம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. போதைப் பழக்கத்தால் பாலியல் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இதையும் தாண்டி திமுகவுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என நம்புகிறீர்களா?

தவெகவுக்கு ஒரு கவுன்சிலர்கூட இல்லை. அங்கு போய் செங்கோட்டையன் சேர்ந்துள்ளார். சேராத இடத்தில் சேர்ந்தால் தோல்விதான் கிடைக்கும். தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். பிஹாரைப் போல் தமிழகத்திலும் பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும். நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

திமுக எதிர்ப்பு ஓட்டுகள் பாஜக கூட்டணிக்குத்தான் வரும். டிடிவி தினகரன் கடந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இல்லை. இதனால் பாஜக கூட்டணிக்கு வாக்குகள் குறையும் என்பது எப்படி சரியாகும். அண்ணாமலை பாஜகவில் உள்ளார். மாநிலத் தலைவராக இருந்துள்ளார். அவர் தனிக்கட்சி தொடங்க மாட்டார். தமிழகத்தில் பழனிசாமி தலைமையில்தான் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்கிறோம். பழனிசாமி தலைமையை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை” என்றார்.

செங்கோட்டையன் தவெக-வில் இணைய காரணம் யார்? - நயினார் நாகேந்திரன் புதுத் தகவல்
டெல்லியில் முகாமிட்டுள்ள ஓபிஎஸ்: பாஜக தலைவர்களை சந்திக்க திட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in