‘மதத்தை காரணம் காட்டி இடஒதுக்கீட்டை மறுப்பதா?’ - சீராய்வு மனு தாக்கல் செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

| கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: “இஸ்லாமை தழுவிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பிற்படுத்தப்பட்ட (BC) பிரிவுக்கான இட ஒதுக்கீடு அளிக்கத் தேவையில்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உடனடியாகச் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் கொள்கையை உறுதி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்த பதிவில், “இஸ்லாம் மதம் தழுவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையைக் காப்பாற்ற தமிழக அரசு உடனடியாகச் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

சமூகரீதியான பின்னடைவு (social backwardness) ஒரு நாளிலோ ஒரு தலைமுறையிலோ ஏற்படுவதல்ல. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்த சமூகக் கட்டமைப்பினால் அடைந்தது. மதம் மாறுவதாலேயே அது மறைந்துவிடுவதில்லை.

இதுவே சமூக யதார்த்தமாக இருக்கும் நிலையில், "இஸ்லாமைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு BC (M) பிரிவுக்கான இட ஒதுக்கீடு அளிக்கத் தேவையில்லை" எனும் மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது.

தமிழக அரசு உடனடியாக இத்தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து இசுலாம் மதத்தை ஏற்பவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும்.

கடந்த திராவிட மாடல் அரசில், கிறித்தவர்களாக மதம் மாறும் ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றினோம். அந்த முயற்சிகளையும் தற்போதைய தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

சாதியினால் ஒடுக்குமுறையை எதிர்கொண்ட BC, MBC, SC மக்களுக்கு அதனையே அளவுகோலாகக் கொண்டு இட ஒதுக்கீடு அளிப்பதுதான் சமூகநீதிக்கு வழிவகுக்கும். பின்பற்றும் மதத்தைக் காரணம் காட்டி அந்த உரிமையை மறுப்பது சமூக அநீதியாக அமைந்துவிடும்.” எனப் பதிவிட்டுள்ளார்.

<div class="paragraphs"><p>திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்</p></div>
Call Me Chihiro: ‘அன்பென்னும் மழை’ சிஹிரோ | திரை தேவதைகள் 39

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in