அரிசி இருப்பு வரம்பை உயர்த்த வேண்டும்: வணிகர் சங்கங்களின் பேரவை கோரிக்கை

அரிசி இருப்பு வரம்பை உயர்த்த வேண்டும்: வணிகர் சங்கங்களின் பேரவை கோரிக்கை
Updated on: 
1 min read

சென்னை: உணவுத் துறை அமைச்​சர் வெங்​கடரமணனுக்கு தமிழ்​நாடு வணி​கர் சங்​கங்​களின் பேர​வைத் தலை​வர் எஸ்​.சவுந்​தர​ராஜன் நேற்று அனுப்​பிய மனு: அரிசி இருப்பு கட்​டுப்​பாட்டு அரசாணை​யில், மொத்த அரிசி வியா​பாரி​கள் 2 ஆயிரம் டன் வரை இருப்பு வைக்க அனு​மதி தரப்​பட்​டுள்​ளது.

ஆனால், சில்​லறை வியா​பாரி​கள், பெரிய மளி​கைக் கடைக்​காரர்​கள் அதி​கபட்​சம் 8 டன் மட்​டுமே இருப்பு வைக்க வேண்​டும் என நிர்​ண​யம் செய்​திருப்​பது சிக்​கல்​களை ஏற்​படுத்​துகிறது.

ஒரு பெரிய மளி​கைக் கடைக்​காரர், தனது கடை​யில் ஏற்​கெனவே 3 முதல் 5 டன் வரை அரிசி இருப்பு இருக்​கும்​போதே, அடுத்த கட்ட ஆர்​டர் வழங்​கு​வது வழக்​கம்.

அரிசி ஆலைகள், மொத்த விற்​பனை​யாளர்​களிடம் இருந்து லாரி​கள் மூலம் அனுப்​பும்​போது, ஒரு லாரி லோடு என்​பது குறைந்​த​பட்​சம் 10 டன் முதல் 20 டன் வரை அனுப்​பப்​படு​கிறது.

ஏற்​கெனவே கடை​யில் உள்ள 3 முதல் 5 டன் இருப்​போடு, புதி​தாக வரும் ஒரு லாரி லோடு அரிசியை இறக்​கும்​போது, மொத்த இருப்பு உடனடி​யாக 15 முதல் 25 டன்​னாக உயர்ந்​து​விடு​கிறது.

அரசின் 8 டன் உச்ச வரம்​பால், ஒரு லாரி லோடு சரக்​கைக் கூட முழு​மை​யாக இறக்க முடி​யாத சூழல் ஏற்​பட்​டுள்​ளது. எனவே, 20 டன் வரை இருப்பு வைக்க அனு​மதி அளிக்க வேண்டும்.

அரிசி இருப்பு வரம்பை உயர்த்த வேண்டும்: வணிகர் சங்கங்களின் பேரவை கோரிக்கை
வழிகாட்டி நிறுவன ஊழியர்கள் பெருமளவில் ராஜினாமாவா? - தமிழக அரசு விளக்கம்

X