வழிகாட்டி நிறுவன ஊழியர்கள் பெருமளவில் ராஜினாமாவா? - தமிழக அரசு விளக்கம்

வழிகாட்டி நிறுவன ஊழியர்கள் பெருமளவில் ராஜினாமாவா? - தமிழக அரசு விளக்கம்
Updated on: 
1 min read

சென்னை: தொழில்துறையின் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தில் ஜூலை மாதம் பெருமளவில் ஊழியர்கள் ராஜினாமா செய்ததாக வெளியான தகவலை தமிழக அரசு மறுத்துள்ளது.

தமிழக தொழில்துறை யின்கீழ் செயல்படும் வழிகாட்டி நிறுவனம் (Guidance Tamilnadu), 30 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தின் தொழில் முதலீடு களை ஈர்ப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது.

பன்னாட்டு நிறுவனங்களை அணுகுவது, முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தவெக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வழிகாட்டி நிறுவனத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்த 15 பேரை பணியில் இருந்து விலக வலியுறுத்தியதாக தெரிகிறது.

முந்தைய ஆட்சிகளில் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் இந்த நடவடிக்கையை தொழில்துறை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் 15 பேரும் கடந்த ஜூலை மாதமே பணியில் இருந்து விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே தமிழகத்துக்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் சமீபகாலமாக ஆந்திர மாநிலத்துக்கு செல்வதாக திமுக உள்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. எனினும், அதற்கு தவெக அரசு மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில் தமிழக வழிகாட்டி நிறுவனத்தில் இருந்து பதவி விலகியவர்களில் கிறிஸ்டோ லாரல், பிரபாகரன், ப்ரீஜா பிரசாத் ஆகிய உள்பட 4 பேர் ஆந்திர மாநில பொருளாதார மேம்பாட்டு குழுமத்தில் சமீபத்தில் இணைந்துள்ளனர்.

இவர்கள் மூலமாகவே ஆந்திராவுக்கு நமது தொழில் முதலீடுகள் குறித்த ரகசியங்கள் கசிந்ததாக சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியுள்ள தாவது: எங்கள் நிறுவனத்தில் கடந்த ஜூலை மாதம் பெருமளவில் ஊழியர்கள் ராஜினாமா செய்யவில்லை.

இதுதொடர் பாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை. ஒரு நிறுவனத்தில் ஊழியர்கள் பணியிலிருந்து விலகுவது இயல்பான நிகழ்வாகும். சிறந்த வேலைவாய்ப்புகள், உயர்கல்வி, இடமாற்றம், சொந்த மற்றும் குடும்பச் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வழிகாட்டி நிறுவனத்தில் இருந்தும் ஊழியர்கள் வெளியேறு கின்றனர்.

ஊழியர்கள் தங்களது தொழில்முறை வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு வேறு வாய்ப்புக ளைத் தேர்வு செய்வதை நாங்கள் மதித்து வருகிறோம்.

முதலீடுகளை ஈர்ப்பதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் அண்டை மாநிலங்களுடன் தமிழகம் எப்போதும் ஆரோக்கியமான போட்டியை மேற்கொண்டு வருகிறது.

இது இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது. மேலும், உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர் களின் விருப்பமான முதலீட்டு இடமாக தமிழகம் தொடர்ந்து திகழ்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டி நிறுவன ஊழியர்கள் பெருமளவில் ராஜினாமாவா? - தமிழக அரசு விளக்கம்
வி.எஸ்.பாபு மரணத்தில் சந்தேகம்: டிஜிபி, காவல் ஆணையரிடம் சமூக ஆர்வலர் புகார்

X