திருமாவளவனுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க கோரிக்கை: தமிழக அரசு அறிக்கை தர உத்தரவு

திருமாவளவனுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க கோரிக்கை: தமிழக அரசு அறிக்கை தர உத்தரவு
Updated on
1 min read

சென்னை: ​விசிக தலை​வர் திரு​மாவளவனுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க கோரிய மனு தொடர்​பாக, தமிழக அரசு விரி​வான அறிக்கை தாக்​கல் செய்ய தமிழ்​நாடு ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் நல ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

விழுப்​புரம் மாவட்​டம் உளுந்​தூர்​பேட்​டை​யில் விசிக சார்​பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு கடந்த மாதம் 17-ம் தேதி நடை​பெற்​றது. மாநாட்டு மேடைக்கு திரு​மாவளவன் வந்​த​போது, பலர் அவரை சூழ்ந்​து​கொண்டு செல்ஃபி எடுக்க முயன்​ற​தால் கடுமை​யான நெரிசல் ஏற்​பட்​டது.

கூட்​டம் கட்​டுக்​கடங்​காமல் மேடையை நோக்கி முண்​டியடித்​த​தில், அவருக்கு மூச்​சுத்​திணறல் ஏற்​பட்டு மயக்​கமடை​யும் சூழல் உரு​வானது. இதையடுத்​து, அவர் தனது உரையை சுருக்​க​மாக முடித்​துக்​கொண்டு அங்​கிருந்து உடனடி​யாக வெளி​யேறி​னார்.

தொடர்ந்​து, ‘மா​நாட்டு மேடை​யில் ஏற்​பட்ட இந்த நெரிசல் இயல்​பாக நடந்த சம்​பவம் அல்ல, சமூக விரோ​தி​கள் சில​ரால் திட்​ட​மிட்டு தூண்​டி​விடப்​பட்ட சதி போல தோன்​றுகிறது’ என விசிக சார்​பில் கள்​ளக்​குறிச்சி மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அலு​வல​கத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், சென்னை வேளச்​சேரியைச் சேர்ந்த வழக்​கறிஞர்​கள் ராஜேந்​திரன் மற்​றும் நெப்​போலியன், “உளுந்​தூர்​பேட்டை சம்​பவத்தை சுட்​டிக்​காட்​டி, திரு​மாவளவனுக்கு துப்​பாக்கி ஏந்​திய போலீஸ் பாது​காப்பு மற்​றும் ‘இசட்’ பிரிவு பாது​காப்பு வழங்க வேண்​டும்.

மாநாட்டு மேடை சம்​பவம் குறித்து உரிய விசா​ரணை நடத்த உத்​தர​விட வேண்​டும்” என சென்​னை​யில் உள்ள தமிழ்​நாடு ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் நல ஆணை​யத்​தில் மனுத் தாக்​கல் செய்​தனர்.

இந்த மனுவை விசா​ரித்த ஆணை​யத்​தின் உறுப்​பினர்​கள் ஆனந்​த​ராஜா, இளஞ்​செழியன் ஆகி​யோர் அடங்​கிய அமர்​வு, இந்த விவ​காரம் தொடர்​பாக உரிய விசா​ரணை மேற்​கொண்டு எடுக்​கப்​பட்ட நடவடிக்​கை​கள் குறித்த விரி​வான அறிக்​கையை தமிழக அரசின் தலை​மைச் செயலர், உள்​துறை செயலர் மற்​றும் கள்​ளக்​குறிச்சி மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் ஆகி​யோர் அக்​.5-க்​குள் தாக்​கல் செய்​ய வேண்​டும்​ என உத்​தர​விட்​டனர்​.

திருமாவளவனுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க கோரிக்கை: தமிழக அரசு அறிக்கை தர உத்தரவு
முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம்: அதிமுக முன்னாள் எம்பிக்கு 2 ஆண்டு சிறை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in