தீயாய் பரவும் ‘டீப்ஃபேக்’ மோசடி: பொதுமக்களுக்கு சிபிஐ எச்சரிக்கை

தீயாய் பரவும் ‘டீப்ஃபேக்’ மோசடி: பொதுமக்களுக்கு சிபிஐ எச்சரிக்கை
Updated on
1 min read

சென்னை : ‘டீப்ஃபேக்’ எனப்​படும் செயற்கை நுண்​ணறி​வுத் தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்தி பணம் பறிக்​கும் மோசடி சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​வ​தாக பொது​மக்​களுக்கு சிபிஐ எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

இதுதொடர்​பாக சிபிஐ-​யின் எக்ஸ் தள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) மூலம் ஒரு​வரின் முகம், குரல் மற்​றும் உடல் அசைவு​களை அப்​படியே நகலெடுத்​து, அவர் செய்​யாத ஒரு செயலைச் செய்​தது போல​வும், பேசாத ஒரு விஷ​யத்​தைப் பேசி​யது போல​வும் போலியான வீடியோக்​கள், புகைப்​படங்கள் அல்​லது ஆடியோக்களை உரு​வாக்​கு​ வதே ‘டீப்ஃபேக்’ ஆகும். இவை பார்ப்​ப​தற்கும் கேட்​ப​தற்​கும் உண்​மையானவை போலவே இருக்​கும். இதனை பயன்​படுத்தி சைபர் குற்​ற​வாளி​கள் ​மக்​களின் பணத்தை பறிக்​கும் செயல்​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

எனவே, அதிர்ச்​சி​யூட்​டும் அல்​லது உணர்ச்​சிகர​மான வீடியோக்​கள், புகைப்​படங்​கள் மற்​றும் ஆடியோக்​களை மற்​றவர்​களுக்​குப் பகிரும் முன், அதன் உண்​மைத் தன்​மையை ​மக்​கள் ஆராய வேண்​டும். வீடியோ கால் மூலமாகவோ அல்​லது அவசரத்தேவை என்று குரல் வழிச் செய்​தி​யாகவோ யாராவது பணம் கேட்டால், உறு​திப்படுத்​தாமல் உடனடியாகப் பணத்தை அனுப்​பக்​ கூ​டாது.

சந்​தேகம் ஏற்​பட்​டால், அந்​தச் செயலை உடனடி​யாக நிறுத்​தி, உண்​மைத்​தன்​மை​யைச் சரி​பார்த்​து, மோசடி என்று தெரிந்​தால் உடனடி​யாக புகார் அளிக்க வேண்​டும். செயற்கை நுண்​ணறி​வால் நம்ப முடி​யாத அளவுக்​குப் போலிகளை உரு​வாக்க முடி​யும். உங்​கள் விழிப்​புணர்வே உங்​களுக்​கான முதல் பாது​காப்​பு.

எதை​யும் நம்​பும் முன் ஒரு​முறைக்கு இரு​முறை சரி​பார்க்​க​வும். யாரேனும் இணை​ய வழி மோசடியால் பா​திக்​கப்பட்​டால் 1930 என்ற எண்​ணிலோ அல்​லது www.cybercrime.gov.in என்ற இணை​ய தளத்​தில் புகார் அளிக்​கலாம். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்டுள்​ளது.

தீயாய் பரவும் ‘டீப்ஃபேக்’ மோசடி: பொதுமக்களுக்கு சிபிஐ எச்சரிக்கை
முதல்வர் விஜய் தலைமையில் ‘வெற்றித் தமிழ்நாடு’ முதலீட்டாளர் மாநாடு: ரூ.67,452 கோடிக்கு 97 ஒப்பந்தங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in