குடும்ப மருத்துவரை அணுகும் போக்கு குறைகிறது: கவலை தெரிவிக்கும் மூத்த மருத்துவர்கள்

குடும்ப மருத்துவரை அணுகும் போக்கு குறைகிறது: கவலை தெரிவிக்கும் மூத்த மருத்துவர்கள்
Updated on: 
1 min read

தாம்பரம்: ஒவ்​வொரு குடும்​பத்​தின் உடல்​நலத்​தையும் தொடர்ந்து கண்​காணித்து, நோயின் தன்​மையை அறிந்து சிகிச்சை அளித்து வந்த குடும்ப மருத்​து​வர்​களின் பங்கு தற்​போது குறைந்து வரு​வ​தாக மூத்த மருத்​து​வர்​கள் கவலை தெரி​வித்​துள்​ளனர்.

சென்​னையை அடுத்த தாம்​பரத்​தில் இந்​திய மருத்​துவ சங்​கத்​தின் தாம்​பரம் கிளை சார்​பில் 3 நாள் மருத்​து​வக் கண்​காட்சி கடந்த 17-ம் தேதி தொடங்​கியது. இதை​யொட்டி, ‘என் குடும்ப நல மருத்​து​வர்​கள்’ என்ற தலைப்​பில் நடை​பெற்ற கருத்​தரங்​கில் மருத்​து​வர்​கள் பாலசுப்​ரமணி​யன், ராகவேலு, யசோதா, அமுதா, கருணாநிதி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றுப் பேசினர்.

அவர்​கள் பேசிய​தாவது: முன்​பெல்​லாம் ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கும் ஒரு குடும்ப மருத்​து​வர் இருப்​பார். குழந்​தைகள் முதல் முதி​ய​வர்​கள் வரை குடும்​பத்​தில் யாருக்கு உடல்​நலக் குறைவு ஏற்​பட்​டாலும் முதலில் அந்த மருத்​து​வரைத்​தான் அணுகு​வார்​கள். குடும்ப உறுப்​பினர்​களின் வயது, உடல்​நிலை, ஏற்​கெனவே இருந்த நோய்​கள், மருத்​து​வப் பின்​னணி, உணவுப் பழக்​கம் உள்​ளிட்ட விவரங்​களை அறிந்​திருப்​ப​தால், நோயின் தன்​மையை புரிந்​து​கொண்டு சிகிச்சை அளிப்​ப​தில் குடும்ப மருத்​து​வர்​கள் முக்​கியப் பங்கு வகித்​தனர். நோய் ஏற்​பட்ட பிறகு சிகிச்சை அளிப்​பது மட்​டுமின்றி, நோய் வராமல் தடுப்​ப​தற்​கான ஆலோ​சனைகளையும் வழங்குவர்.

ஆனால், தற்​போது இதய​வியல், சிறுநீரக​வியல், நரம்​பியல், எலும்​பியல், சர்க்​கரை நோய் உள்​ளிட்ட பல்​வேறு மருத்​துவ சிறப்​புப் பிரிவு​கள் வளர்ச்சி அடைந்​துள்​ளன. இத​னால், உடல்​நலப் பிரச்​சினை ஏற்​பட்​ட​வுடன் குடும்ப மருத்​து​வரை அணுகு​வதற்​குப் பதிலாக, சம்​பந்​தப்​பட்ட சிறப்பு மருத்​து​வரை நேரடி​யாக அணுகும் போக்கு அதி​கரித்​துள்​ளது. இதன் காரண​மாக, குடும்​பத்​தின் ஒட்​டுமொத்த உடல்​நலத்​தையும் தொடர்ந்து கண்​காணிக்​கும் குடும்ப மருத்​து​வர்​களின் பங்கு குறைந்து வரு​கிறது.

சிறப்பு மருத்​து​வர்​களின் சேவை நோய்​களைக் கண்​டறிந்து உரிய சிகிச்சை அளிப்​ப​தில் இன்​றியமையாதது. அதே நேரத்​தில், ஒரு நபர் பல்​வேறு உடல் உபாதைகளுக்கு வேறு வேறு மருத்​து​வர்​களிடம் சிகிச்சை பெறும்​போது, அவர் எடுத்​துக்​கொள்​ளும் மருந்​துகள், முந்​தைய மருத்​து​வப் பதிவு​கள், உடல்​நிலை​யில் ஏற்​படும் மாற்​றங்​கள் ஆகிய​வற்றை ஒருங்​கிணைத்​துக் கண்​காணிப்​ப​தும் அவ​சி​ய​மாகிறது.

ஒரு குடும்​பத்​தின் மருத்​து​வப் பின்​னணியை அறிந்த குடும்ப மருத்​து​வர் இருப்​பது, நோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்​டறிய​வும், தேவை​யான நேரத்​தில் சிறப்பு மருத்​து​வர்​களின் ஆலோ​சனையைப் பெறவும் உதவும். எனவே, சிறப்பு மருத்​து​வத் துறைகளின் வளர்ச்​சிக்கு இணை​யாக குடும்ப மருத்​துவ முறைக்​கும் முக்​கியத்​து​வம் அளிக்க வேண்டும். ஒவ்​வொரு குடும்​பமும் நம்​பிக்​கை​யான மருத்​து​வருடன் தொடர்ந்து தொடர்​பில் இருக்​கும் பழக்​கத்தை மீண்​டும் வளர்த்​துக்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் வலியுறுத்​தினர்.

குடும்ப மருத்துவரை அணுகும் போக்கு குறைகிறது: கவலை தெரிவிக்கும் மூத்த மருத்துவர்கள்
சென்னை, திருச்சி, கோவை, நீலகிரிக்கு ஆரஞ்ச் அலர்ட்: 6 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in