நிதிச்சுமையை காரணம் காட்டி நுகர்வோர் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை குறைப்பதா?

தமிழக அரசுக்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு
நிதிச்சுமையை காரணம் காட்டி நுகர்வோர் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை குறைப்பதா?
Updated on
1 min read

மதுரை: தமிழகத்தில் நிதிச்சுமையை காரணம் காட்டி, நுகர்வோர் நீதிமன்றங்களின் எண்ணிக் கையை 31-லிருந்து 14 ஆக குறைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 32 மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நுகர்வோர் நீதிமன் றங்களை பராமரிப்பதற்கான நிதிச்சுமையை தவிர்க்கும் வகையில், ஆயிரத்துக்கும் குறைந்த வழக்குகள் நிலுவையில் இருக்கும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களை கலைக்கவோ அல்லது அந்த வழக்குகளை வேறு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் சேர்க்கவோ மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, தமிழகத் தில் தற்போது 32 ஆக இருக்கும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களின் எண்ணிக் கையை 14 ஆக குறைக்க முடிவு செய்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசின் இந்த முடிவு அமலுக்கு வந்தால், இனிமேல் சென்னை தெற்கு, சென்னை வடக்கு, கோவை, செங்கல்பட்டு, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, திருவண்ணா மலை, மதுரை, திருவாரூர் மாவட்டங்களில் மட்டுமே நுகர்வோர் நீதிமன்றங்கள் செயல்படும்.

திருப்பூர், நீலகிரி மாவட்ட வழக்குகள் ஈரோடு நீதிமன்றத்துக்கும், வேலூர் மாவட்ட வழக்குகள் கிருஷ்ணகிரி நீதிமன்றத்துக்கும், சேலம் வழக்குகள் நாமக்கல் நீதிமன்றத்துக்கும், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட வழக்குகள் விருதுநகர் (ஸ்ரீவில்லிபுத்தூர்) நீதிமன்றத்துக்கும், புதுக்கோட்டை வழக்குகள் தஞ்சாவூருக்கும், கரூர் வழக்குகள் திருச்சிக்கும், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட வழக்குகள் நெல்லைக்கும், விழுப்புரம், கடலூர் வழக்குகள் திருவண்ணாமலைக்கும், திண்டுக்கல், தேனி மாவட்ட வழக்குகள் மதுரைக்கும், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம் வழக்குகள் திருவாரூருக்கும் மாற்றப்படும்.

தமிழக அரசின் இந்த முடிவுக்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மதுரை வழக்கறி ஞர்கள் கூறியதாவது: மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்கள் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன.

சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்படும் அனைத்து வகையான நுகர்வோர்கள் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற்று வருகின்றனர். இதனால், நுகர்வோர் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை குறைப்பது சரியல்ல.

நுகர்வோர் நீதிமன்றங்க ளின் எண்ணிக்கை குறைக்கப் பட்டால், மக்களுக்கு கூடுதல் செலவு மற்றும் அலைச்சல் ஏற்படும். மக்கள் புகார் அளிக்க நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியது ஏற்படும்.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி 90 நாட்களுக்குள் வழக்குகளை முடிக்க வேண்டும். நீதிமன்றங்களை இணைப்பதால் பணிச்சுமை கூடி, தீர்ப்புகள் மேலும் தாமதமாகும். எனவே, நுகர்வோர் நீதிமன் றங்களின் எண்ணிக்கையை குறைக்காமல், நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதிலும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். இதற்கு தனியாக நிதி ஒதுக்க வேண்டும் என்றனர்.

நிதிச்சுமையை காரணம் காட்டி நுகர்வோர் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை குறைப்பதா?
“ரியாலிட்டி ஷோ போல சட்டப்பேரவை விவாதங்கள்” - நடிகை கஸ்தூரி கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in