“ரியாலிட்டி ஷோ போல சட்டப்பேரவை விவாதங்கள்” - நடிகை கஸ்தூரி கருத்து

“ரியாலிட்டி ஷோ போல சட்டப்பேரவை விவாதங்கள்” - நடிகை கஸ்தூரி கருத்து
Updated on
1 min read

கும்பகோணம்: பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதால், தமிழகத்தின் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படும் என நடிகை கஸ்தூரி தெரிவித்தார்.

கும்பகோணத்தில் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: சட்டப்பேரவையில் நடைபெறும் விவாதங்கள், ரியாலிட்டி ஷோக்கள்போல பரபரப்பாக உள்ளன. ஆனால், சட்டப்பேரவையில் நாகரிகத்துடன் பேச வேண்டியது அவசியம்.

திமுக அரசு கொண்டு வந்த ஒரே காரணத்துக்காக தமிழகத்துக்கான வளர்ச்சித் திட்ட பணிகளை தவெக அரசு கைவிடுவது மிகப் பெரிய தவறு. பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் விளை நிலங்கள் பாதிக்கப்படுவது உண்மைதான்.

ஆனால், ஏற்கெனவே 90 சதவீதம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டது. மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கப் பெற்ற இந்த திட்டத்தைக் கைவிடுவது என்பது தமிழக வளர்ச்சிக்கான மிகப்பெரிய பின்னடைவு. எனவே, இதை தமிழக முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

“ரியாலிட்டி ஷோ போல சட்டப்பேரவை விவாதங்கள்” - நடிகை கஸ்தூரி கருத்து
சென்னை | பிரபல மருத்துவமனை தலைவரின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்தி ரூ.65 லட்சம் மோசடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in