செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெற ஜூன் 15 வரை அவகாசம் நீட்டிப்பு

செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெற ஜூன் 15 வரை அவகாசம் நீட்டிப்பு
Updated on
1 min read

சென்னை: மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: நகர்ப்​புற உள்​ளாட்சி அமைப்​பு​கள் சட்ட விதி​களின்​படி, சென்னை மாநக​ராட்சி எல்​லைக்​குள் உள்ள செல்​லப் பிராணி​களின் உரிமை​யாளர்​கள் செல்​லப் பிராணி​கள் வளர்ப்​ப​தற்​கான உரிமம் பெறு​வது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது.

நாய் மற்​றும் பூனை ஆகிய​வற்​றுக்​கான உரிமம் பெறும் நடை​முறையை மேலும் விரைவுப்​படுத்​த​வும், செல்​லப் பிராணி​களுக்​கான உரிமத்தை எளி​தாக பெற்​றுக் கொள்​வதற்​காக​வும் மேம்​படுத்​தப்​பட்ட இணை​யதள சேவை பயன்​பாட்​டில் உள்​ளது.

செல்​லப் பிராணி​களுக்கு உரிமம் பெறு​வதற்​கான காலக்​கெடு கடந்த டிச.14-ம் தேதி வரை வழங்​கப்​பட்ட நிலை​யில், இது​வரை 78,392 செல்​லப் பிராணி​களுக்கு உரிமங்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

அவற்​றில் 9,656 உரிமங்​கள் புதுப்​பிக்​கப்​ப​டாத நிலை​யில் தற்​போது 68,736 செல்​லப்​பி​ராணி உரிமங்​கள் நடை​முறை​யில் உள்​ளன.

அனைத்து செல்​லப் பிராணி​களின் உரிமை​யாளர்​களும் உரிமம் பெறு​வதை உறுதி செய்ய, இந்த காலக்​கெடு வரும் ஜூன் 15-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​படு​கிறது.

ஜூன் 16-ம் தேதி முதல் உரிமம் பெறாத நாய் மற்​றும் பூனை ஆகிய செல்​லப் பிராணி​களின் உரிமை​யாளர்​களுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் வி​திக்​கப்​படும். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in